செய்திகள் :

Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது..." - சிவகார்த்திகேயன்

post image

அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

Sivakarthikeyan

நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனா, சிவகார்த்திகேயனிடம், நகை வாங்குவதில் அவரின் விருப்பம் என்னவென்று கேட்டதற்கு, "நான் எனக்காக தங்கத்தைத் தேர்வு செய்ததே இல்லை, மனைவியான ஆர்த்திதான் தேர்வு செய்வார்.

கல்யாணத்தின்போது ரிங் வாங்க மட்டும்தான் பணம் இருந்தது. அதனால் ஆர்த்திக்கு முதன்முதலில் மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். அதனை ரொமாண்டிக்காகவெல்லாம் கொடுக்கத் தெரியாது, 'பிடிச்சிருக்கான்னு பாரு' என வெட்கப்பட்டுக் கொடுத்தேன். இப்போது ஆர்த்தியுடன் நகைக் கடைக்குப் போயிருந்தேன்.

என் மனைவியுடன் நகைக் கடைக்குச் சென்றால், இரண்டு மணி நேரம் பார்த்துவிட்டு இறுதியில் முதலில் பார்த்த டிசைனையே தேர்ந்தெடுப்பார். அதில் பாதிக்கப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். ஒரு நாட்டினுடைய பொருளாதார மதிப்பே அதன் தங்க ரிசர்வ்ஸ் வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, தனிநபர் ஒருவருக்கும் தங்கம் மிகப்பெரிய மதிப்பையும் பாதுகாப்பையும் தருகிறது என்றுதான் நினைக்கிறேன். தங்கத்தில் முதலீடு செய்வது என்பது காலப்போக்கில் அதன் மதிப்பைக் கூட்டும் ஒரு நல்ல விஷயம்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

இதைப் பற்றி என்னைக் காட்டிலும் மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால்தான் பலரும் இதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். அது நம் வாழ்க்கைக்கு ஒரு கூடுதல் மதிப்பைத் தருவதோடு, 'நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில் ஒரு நல்ல பொருளை வாங்கியிருக்கிறோம்' என்கிற மனநிறைவையும் கொடுக்கிறது.

விலையுயர்ந்த கைபேசியையோ அல்லது பிற ஆடம்பரப் பொருட்களையோ வாங்குவதைக் காட்டிலும், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நமக்கும் பயன்படும்; நமக்கு அடுத்த தலைமுறைக்கும் உறுதுணையாக இருக்கும்" எனப் பேசியிருக்கிறார்.

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" - முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய்அதில் தமிழ்நாடு முதல்வர் விஜ... மேலும் பார்க்க