செய்திகள் :

Smart Phone-ல் அந்தச் சிறு துளை எதற்கு? | இது தெரியாமப் போச்சே?! 1

post image

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் கீழ்ப்பகுதியில் ஊசி முனை அளவிலான ஒரு சிறிய துளை இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். சிலர் இதை மைக் என்றோ, Reset பட்டன் என்றோ நினைத்திருக்கக் கூடும். ஆனால், அதன் உண்மையான பெயர் Noise-canceling microphone.

Noise-canceling microphone
Noise-canceling microphone

போனில் பேசும்போது, வழக்கமான மைக்ரோபோன் நமது குரலைப் பதிவு செய்யும். அதேநேரம், இந்தச் சிறிய துளையில் உள்ள இரண்டாவது மைக்ரோபோன், நம்மைச் சுற்றியுள்ள இரைச்சல்களை (உதாரணமாக: வாகனங்களின் சத்தம், காற்றின் இரைச்சல், கூட்டத்தின் சலசலப்பு) தனியாக உள்வாங்கும்.

ஸ்மார்ட்போனில் உள்ள தொழில்நுட்பம், இந்த இரண்டு ஒலிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, பின்னணி இரைச்சலை மட்டும் வடிகட்டிவிட்டு, நமது குரலை மட்டும் எதிர்தரப்பிற்கு மிகத் தெளிவாகக் கேட்கச் செய்கிறது.

இதனால், நெரிசலான அல்லது சத்தமான இடங்களில் நீங்கள் பேசினாலும், எதிரில் இருப்பவருக்கு உங்கள் குரல் மட்டுமே துல்லியமாகக் கேட்கும். நவீன உயர்ரக ஸ்மார்ட்போன்களில் இந்தச் சிறிய துளைகள் இரண்டு அல்லது மூன்று கூட இருக்கலாம்.

நாம் பேசுவதை உள்வாங்க ஒன்று, சுற்றுப்புறச் சத்தத்தை அளவிட ஒன்று, வீடியோ எடுக்கும்போது திசை சார்ந்த ஒலியை (Directional Audio) துல்லியமாகப் பதிவு செய்ய ஒன்று என இருக்கும்.

Noise-canceling microphone
Noise-canceling microphone

பலர் தங்கள் போனுக்கு அழகிய உறை போடுவார்கள். சில மலிவான உறைகள் இந்தச் சிறிய துளைகளை மறைத்துவிடும். அதனால் நீங்கள் பேசும்போது எதிரே இருப்பவருக்கு உங்கள் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல கேட்கும்.

இந்தத் துளை பார்ப்பதற்கு சிம் கார்டை வெளியே எடுக்கும் துளை போலவே இருக்கும். அவசரத்தில் இந்த மைக்ரோபோன் துளைக்குள் குத்திவிட்டால், உள்ளே இருக்கும் மெல்லிய மைக்ரோபோன் சவ்வு கிழிந்துவிடும். அதன் பிறகு உங்கள் போனின் நாய்ஸ் கேன்சலேஷன் வேலை செய்யாது.

AC: ஏசி-யின் நட்சத்திரக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? - 5 Star - 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

ஏசி நட்சத்திர குறியீடு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகளும் எதனை கடத்துகிறது.? இது குறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு... மேலும் பார்க்க

AI யுகத்தில் ஏசியின் உருமாற்றம்!

கால ஓட்டத்திற்கு ஏற்ப விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஏசி பயன்பாட்டிலும் தன்னுட... மேலும் பார்க்க

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசி-யை இயக்குகிறீர்களா? - இது உங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்!

கோடையில் வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருக்கும் நாம், வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏ.சி வாங்குகிறோம்.அப்படி வாங்கும் ஏசியை கோடை காலத்தில் எப்படி பயன்படுத்துவது, நீண்ட காலமாக பயன்படுத்தாமல் தீடீ... மேலும் பார்க்க

AC: ஏசி வாங்குறீங்களா? - 1 Ton, 1.5 Ton, 2 Ton... யாருக்கு எது பெஸ்ட்? - EB Billஐ எப்படி குறைப்பது?

ஏசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஇதோ கோடை வந்துவிட்டது. வெளியில் சென்றால் மட்டுமல்ல நிழலில் இருந்தாலும் வியர்வையில் குளித்து விடுவோம். கோடையின் உக்கிரத்தை தணிக்க மலை வாசஸ்தலங்களுக்கு நம்மில் பலரும் ... மேலும் பார்க்க

LPG தட்டுப்பாடு: கேஸ் சிலிண்டரை 'இப்படி' புக் செய்யாதீர்கள்; இது பக்கா மோசடி

மக்களின் தேவை, பயம் - இது தான் மோசடிகளின் அடித்தளம். இந்த மோசடிகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் - எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் மோசடி.ஈரான் போரினால் இந்... மேலும் பார்க்க

2026: AI உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள்! - இனி பேச்சு இல்ல, வீச்சுதான்!

கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகை ஒரு புயல் போல ஆக்கிரமித்திருந்த செயற்கை நுண்ணறிவின் (AI) மீதான அதீத மோகம், தற்போது 2026-ல் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டை உலகளாவிய தொழில்... மேலும் பார்க்க