Smriti Mandhana: பலாஷ் முச்சல் குறித்து பரவும் தகவல்; UnFollow செய்த ஸ்மிருதி மந...
Smriti Mandhana: பலாஷ் முச்சல் குறித்து பரவும் தகவல்; UnFollow செய்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெற இருந்தது.
இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்ததை ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
ஆனால் ஸ்மிரிதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா? என்ற கேள்வி எழுந்தநிலையில் பலாஷ் முச்சல் ஒரு பெண்ணுடன் சாட் (chat) செய்த ஸ்கிரீன்ஷாட்டும் இணையத்தில் வைரலானது.
இதனிடையே ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் நீக்கினார்.
அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தையும் நீக்கியிருந்த அவர் தற்போது பலாஷ் முச்சலை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோவும் செய்திருக்கிறார்.

என்ன நடந்தது என்பதை சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.



















