செய்திகள் :

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

post image

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த நேர்காணலில், ``உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா?" என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, `எனக்கு இன்னும் இந்த நாட்டில் வாழ வேண்டும்' என்றார். அந்த பதில், கிண்டலாகவும் அதேசமயம் அரசியல் பதிலாகவும் இருந்தது.

Taapsee Pannu
Taapsee Pannu

மற்றொரு வீடியோ க்ளிப்பில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்களைக் காண்பித்து, 'இவர்களில் யார் மகாத்மா என நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மகாத்மா காந்தியைத் தேர்வுசெய்து, 'நான் படித்தவரையில் மகாத்மா என்றால், காந்திதான்' எனக் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ க்ளிப்கள் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், "இது வெறும் கருத்து மட்டுமல்ல, இன்றைய காலத்தின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

அதே நேர்காணலில் மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிட... மேலும் பார்க்க

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumarதற... மேலும் பார்க்க

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் பு... மேலும் பார்க்க

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத... மேலும் பார்க்க

Epstein Files: "என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்" - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பா... மேலும் பார்க்க