செய்திகள் :

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

post image

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

Akshay Kumar
Akshay Kumar

தற்போது 'வீல் ஆஃப் பார்டியூன்' நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவரிடம் அவர் வாழ்வில் நடந்த சங்கடமான தருணம் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், "நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் 'அமைதியாக இருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினேன். நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை.

அவர் இப்படிச் செய்து கொண்டே இருப்பதால், என்னுடைய நண்பர் அங்கு அழத் தொடங்கிவிட்டார்.

Akshay Kumar
Akshay Kumar

பிறகு நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றோம். அந்தத் தருணத்தில் என்னுடைய கரியர் முடிந்துவிட்டது என்று பயமும் வந்துவிட்டது.

பிறகு, அவர் சிறிது நேரத்தில் தெளிவான நிலைக்கு வந்துவிட்டார். எனக்கு அது உண்மையிலேயே சங்கடமாக உணர வைத்தது.

முடிந்தால் அதை மாற்ற விரும்புவேன். இன்று இருந்தால் நான் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றிருப்பேன்" எனக் கூறியிருக்கிறார்.

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் பு... மேலும் பார்க்க

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத... மேலும் பார்க்க

Epstein Files: "என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்" - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பா... மேலும் பார்க்க

`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித... மேலும் பார்க்க

Mrunal Thakur: "காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது" - நடிகை மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும... மேலும் பார்க்க