செய்திகள் :

Thalaivar 173: "அதனருகில் வரை வந்து மிஸ் ஆகியது; அது இன்று.!" - நெகிழும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

post image

ரஜினியின் 173வது படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Thalaivar 173
Thalaivar 173

6வது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படம் குறித்தும், ரஜினியை இயக்குவது குறித்தும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், " ஒரு காலத்தில், சிறுநகரத்திலிருந்து வந்த ஒருவனுக்கு, அவனுடைய ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது.

அந்தக் கனவுதான் அவனுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பெருங்கனவு ஒரு நாள் நிகழ்ந்தது.

அதன் பிறகு, அதே நடிகரை வைத்து படம் இயக்குவது அவனுடைய பெரிய கனவாக இருந்தது. அது அருகில் வரை வந்து மிஸ் ஆகிவிட்டது.

Thalaivar 173 - Ciby Chakravarthi
Thalaivar 173 - Ciby Chakravarthi

பிறகு, அதுவொரு நாள் நிகழும் என நம்பிக்கையுடன் இருந்தான். அது இன்று நடந்திருக்கிறது.

'கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும்' என தலைவர் சொன்ன விஷயங்களையே நான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

சில சமயங்களில், வாழ்க்கை கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. "எந்த மொழியில் உங்களுக்கு ஆள... மேலும் பார்க்க

பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்... மேலும் பார்க்க

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் க... மேலும் பார்க்க

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவ... மேலும் பார்க்க