செய்திகள் :

TN Assembly: தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதல்வர் விஜய்! திமுக-வின் முடிவு என்ன? | Live Updates

post image

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக இந்தியாவின் எந்த மாநிலத்தில் குரல் ஒலித்ததோ இல்லையோ, தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல் அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஐந்து மாநிலங்களின் முதலமைச்சர்களைச் சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்தினார்... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்துக்கூட எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சியும், காட்சிகளும் மாறிய பின், தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. இந்த மசோதாவை எதிர்த்து விஜய் கடந்த 8-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார். ஆனால், அதில் திமுகவும், அதிமுகவும் கலந்துகொள்ளவில்லை.

விஜய், உதயநிதி ஸ்டாலின்
விஜய், உதயநிதி ஸ்டாலின்

திமுக - பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதனால் தான், திமுக இந்த விஷயத்தைப் பெரிதாக கையில் எடுக்கவில்லை என்கிற பேச்சும் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டாலும், திமுக ஒன்று வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவிற்கு நெருக்கடி கொண்டு வரவே, இந்தத் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து காய்களை நகர்த்துகிறது தவெக அரசு என்ற தகவல் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு பின் நடக்கும் வாக்கெடுப்பின் போது, தொகுதி மறுவரையறையில் திமுக என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிந்துவிடும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது. நீட் வ... மேலும் பார்க்க

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற... மேலும் பார்க்க

``ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடி... மேலும் பார்க்க

கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும... மேலும் பார்க்க