செய்திகள் :

TNEB-ல் இப்போது 300 AEE-களுக்கு வேலை; மீதி 116 பேர் தகுதியற்றவர்களா? தவெக அரசுக்கு திமுக கேள்வி!

post image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உள்ள‌ குளறுபடிகள் குறித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை இதோ...

"நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!

உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!

TNEB
TNEB

உண்மையின் பின்னணி இதோ:

நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.

திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.

இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!

இப்போது எழும் கேள்வி?

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?

மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?

செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]

குறிப்பு:

மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை".

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்க... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது..."எப்போதும் அம்பேத்கர்... மேலும் பார்க்க

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெ... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க