செய்திகள் :

TNPL 2026: திண்டுக்கல்லை சிதறவிட்ட ராஜ்குமார்… டிஎல்எஸ் முறையில் அசத்தலாக வென்ற திருச்சி!

post image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மழை குறுக்கிட்ட ஒரு பரபரப்பான இரவு. டிஎன்பிஎல் 2026 தொடரின் 22-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

TNPL 2026

முதலில் பேட்டிங் செய்த திருச்சிக்கு தொடக்கமே அதிரடி தான். கே. ராஜ்குமார் – ஜே. சுரேஷ் குமார் பார்ட்னர்ஷிப் திண்டுக்கல் பந்துவீச்சை சிதறடித்தது. ராஜ்குமார் களத்தில் இருந்த நேரம் முழுவதும் திண்டுக்கல் பந்துவீச்சாளர்களுக்கு நிம்மதி இல்லை. ஒரு பக்கம் சுரேஷ் குமார் பவுண்டரிகளால் ஸ்கோரை நகர்த்த, மறுபக்கம் ராஜ்குமார் கிடைத்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ராஜ்குமார் 42 பந்துகளில் 71 ரன்களும், சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர்.

மழையால் ஆட்டம் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையிலும், திருச்சி தனது அதிரடியைக் குறைக்கவில்லை. சஞ்சய் யாதவ் 33 ரன்களும், ஜாபர் ஜமால் 21 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் 197/4 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது திருச்சி.

அதன்பிறகு மைதானத்தில் மழை மட்டுமல்ல… டிஎல்எஸ் கணக்கும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 197 ரன்களைத் துரத்த வேண்டிய திண்டுக்கலுக்கு மழைக்குப் பிறகு டிஎல்எஸ் முறையில் 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த ஓவர்களில் அந்த இலக்கை எட்ட வேண்டிய சூழல், திண்டுக்கல் பேட்டர்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்றியது.

TNPL 2026

199 என்ற இலக்கைத் துரத்திய திண்டுக்கல்லுக்கு சிவம் சிங் 47 ரன்களும், பாபா இந்திரஜித் 32 ரன்களும், ஆர்.கே. ஜெயந்த் 34 ரன்களும் எடுத்து போராடினர். ஆனால் திருச்சியின் பந்துவீச்சு அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே சென்றது. குறிப்பாக கே. ஈஸ்வரன் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டனி தாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

19 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் 170/8 மட்டுமே எடுக்க, டிஎல்எஸ் முறையில் திருச்சி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை 71 ரன்கள் விளாசிய கே. ராஜ்குமார் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

காலே டெஸ்ட்: 372 ரன்கள் இலக்கு… 206-க்கே ஆல் அவுட்டான இலங்கை – அபார வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!

காலே மைதானத்தில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. ஒருபுறம் வெற்றியைத் துரத்திக் கொண்டிருந்தது இலங்கை… மறுபுறம் வெற்றிக்காக விக்கெட்டுகளை வேட்டையாடிக்கொண்டிருந்தது இந்தியா!ஸ்கோர்போர்டில் 372 ரன்கள் என்ற இல... மேலும் பார்க்க

TNPL: சேப்பாக் அணியை வீழ்த்திய கோவை கிங்ஸ்; அழுத்தத்திலும் அதிரடி காட்டிய ராம் அரவிந்த்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரில் நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி நிர்ணயித்த ... மேலும் பார்க்க

TNPL 2026 : கோவை கிங்ஸின் கெத்து பவுலிங் - பேட்டிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.!

TNPL 2026 தொடரின் 21-வது லீக் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ்.டாஸ் வென்ற கோவை அணி முதலில்... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை: 23 ஆண்டுக்கால காத்திருப்பு; ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட்டை வென்ற வங்கதேசம்!

Qqடார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவ... மேலும் பார்க்க

TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த... மேலும் பார்க்க

TNPL 2026: ராணிப்பேட்டையிலிருந்து TNPL வரை; அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசிய ஹரி ராகவேந்திரா!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.திண்டுக்கல் நத்தம... மேலும் பார்க்க