செய்திகள் :

TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏரல் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சங்கம் மட்டுமில்லாமல் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு
மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் ஆய்வை நியாயப்படுத்தும் வகையிலும், ஏரல் அரசு மருத்துவமனையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் ஸ்ரீவைகுண்டம் நகரின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 

குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வெளிச்சுவர், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி சுற்றுப்புறச் சுவர், கிளை நூலகச் சுவர் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுப் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நள்ளிரவு ஆய்வை நியாயப்படுத்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில், "ஏரலில் மருத்துவர் அலட்சியத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்" என்று கூறி நோயாளிகளை அலட்சியமாக அனுப்பி வைக்கின்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல், செவிலியர்களை மட்டுமே கொண்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சர்ச்சை போஸ்டர்
சர்ச்சை போஸ்டர்

இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வேறு வழியின்றி அதிக பணம் செலவழித்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

"இந்த விஷயத்தை சட்டமன்ற உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? இது முற்றிலும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னை" எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள்  வன்மையான கண்டனம் எனவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓய்ந்துபோன இந்த ஆய்வு சர்ச்சையை, தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளால் மீண்டும் சூடான விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டு சுமத்தி ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டி பிரசாரம், அப்பகுதி அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை போஸ்டர்

பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நள்ளிரவு ஆய்வு பணியை நியாயப்படுத்த அரசு மருத்துவமனையின் செயல்பாட்டைக் குறை கூறி தமிழக வெற்றிக் கழகத்தினரே இந்தச் சுவரொட்டிகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டி வருவது பொதுமக்களிடையே பேசும் பொருளாகி உள்ளது.

பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" - அரசுக்கு சீமான் கண்டனம்!

பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ்... மேலும் பார்க்க

``விஷக் குப்பியா... தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" - கேட்கிறார் திலகபாமா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதும் அங்கம் வகித்துவருவதாகச் சொல்லிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடந்துமுடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்றுக... மேலும் பார்க்க

"பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" - எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில்

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் நேற்று (அக்டோபர் 7) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.அது “துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்... மேலும் பார்க்க

கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார்

மோதிக்கொள்ளும் இஸ்லாமிய இயக்கங்கள்!''ஐ.யூ.எம்.எல் Vs ம.ஜ.க'தமிழக அரசியலில் ஐ.யூ.எம்.எல் கட்சியும், மனிதநேய ஜனநாயகக் கட்சியும் பெரும்பாலும் ஒரே அணியில் இடம்பெற்று பரஸ்பரம் நட்புடன் பயணித்து வந்தனர். 20... மேலும் பார்க்க

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள புதுமனை அம்மாள் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவப்பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர... மேலும் பார்க்க

"இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உட... மேலும் பார்க்க