செய்திகள் :

TVK: "கலாம் ஐயா சொன்னதுபோல, இந்தக் கனவு என்பது பெரும் கனவு!" - பதவியேற்புக்கு பின் ராஜ்மோகன்!

post image

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதுடன், 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பதவியேற்ற 9 அமைச்சர்களில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகனும் ஒருவர். பதவியேற்பிற்கு பின் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ராஜ்மோகன், "என் மீது தலைவர் வைத்திருக்கிற நம்பிக்கை, எங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கை. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்காகக் கடுமையாக நாங்கள் போராடுவோம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் இனி மக்களுக்கானது. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இந்த நாள் என்பது சரித்திரத்தில் ஒரு பொன்னாளாக மாறியிருக்கிறது.

விஜய் - ராஜ்மோகன்
விஜய் - ராஜ்மோகன்

இதற்கு முன்பு இப்படிப் பல விழாக்கள் இருந்தாலும் கூட, இந்த விழா என்பது ஒரு புதிய சரித்திரத்தினுடைய ஒரு புதிய பக்கமாக இருக்கிறது." என்றவரிடம், "சரியாக 30 நாட்களுக்கு முன்பு தவெக ஆட்சி அமைப்பது கனவு என விமர்சித்திருந்தார்களே.." எனச் செய்தியாளர் கேட்டதற்கு, "அதாவது தூக்கத்தில் காண்பது இல்லை கனவு, உன்னை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று கலாம் ஐயா சொன்னது போல, இந்தக் கனவு என்பது பெரும் கனவு. இந்தக் கனவு ஒவ்வொரு நாளும் நனவாகப் போகிற கனவு. " எனக் கூறியிருக்கிறார்.

`சாதிவாரி சர்வே; மதுக்கடைகள் மூடல்...' - முதல்வர் விஜய்-ன் கவனத்துக்கு அன்புமணி முன்வைப்பவை!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

Vijay : "மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து.!" - முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” - ரிப்போர்ட் ரெடி!

தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. போதிய பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க அல்லோலப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் ஒன்று ரெ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வரானார் சுவந்து அதிகாரி; பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டனர் என்று கூறி மம்தா... மேலும் பார்க்க

"என்ன வன்மம் பாருங்க; என்னை மிரட்ட பார்க்கிறாங்க!" - தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் டிடிவி!

தமிழக அரசியல் சூழல் தற்போது பரபரப்பாக இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திடீரென ஆளுநர் மாளிகை வந்து, 'அமமுக சார்பில் வென்ற காமராஜ், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் போலிக் கடிதம் கொடு... மேலும் பார்க்க

"நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்; தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும்!" - வன்னி அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தவெகவிற்கு ஆதரவைத் வழங்குவதாக நேற்று அறிவித்தனர். இருப்பினும், தவெக-விற்கு இன்னும் பெரும்பான்மை பெறவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ... மேலும் பார்க்க