செய்திகள் :

TVK: 'திக்.. திக்.. துறைமுகம்' - முந்தும் தவெக; மூன்றாவது இடத்தில் சேகர்பாபு!

post image

சென்னை மாநகரின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான துறைமுகத்தில், இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே நிலவும் அரசியல் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபுவை எதிர்த்து தவெக சார்பில் சினோரா அசோக் என்பவர் போட்டியிட்டிருந்தார்.

பிரசாரத்தின் போதே இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் கடுமையாக நடந்திருந்தது. சேகர் பாபு தன்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாக சினோரா அசோக் பிரசாரத்திலேயே குற்றஞ்சாட்டியிருந்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களோடு நேருக்கு நேராக மோதிக் கொண்டனர். காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் வந்தே இருதரப்பையும் விலக்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னை தொகுதிகளில் துறைமுகம் கூர்ந்து கவனிக்கும் தொகுதியாக மாறியது. எனவே, "அமைச்சர் vs புதிய முகம்" என்ற ரீதியில் இந்த மோதல் ஒரு தனிப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சினோரா அசோக், அமைச்சருக்குப் பலத்த அதிர்ச்சி அளித்து முன்னிலை பெற்றுள்ளார். காலை 10:45 மணி நிலவரப்படி, சினோரா அசோக் 4,544 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 3,933 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக-வின் சேகர்பாபு 3,839 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் பௌஜான் ஷரீப் 281 வாக்குகள் பெற்று 4-ம் இடத்திலும் இருக்கின்றனர். அமைச்சரை விட சுமார் 705 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க