செய்திகள் :

TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' - தவெக அப்டேட்

post image

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார்.

Vijay
Vijay

விஜய்யின் தவெகவும் NDA வும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது. தவெக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் 'நாங்கள் யாருடனும் கூட்டணி பேசவில்லை' என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை இந்த நிகழ்வுக்காக தவெகவினர் அழைக்கவிருக்கின்றனர்.

Vijay
Vijay

கடந்த முறை தவெக சார்பில் இஃப்தார் நிகழ்வு இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடத்தப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முறை மாமல்லபுரத்தில் இந்நிகழ்வை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இஃப்தார் நிகழ்வில் விஜய் அரசியல் பேசமாட்டார். ஆனால், இஸ்லாமியர்களுடன் எப்போதும் துணையாக நிற்பேன் என ஓரிரு வரிகள் பேசினாலும் அதன் மூலம் நிறைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனக் கூறுகின்றனர் தவெகவினர்.

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'மாவட்ட கள நிலவரம்!மயிலாடுதுறைமயிலாடுதுறை... மேலும் பார்க்க

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.... மேலும் பார்க்க

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு ... மேலும் பார்க்க

நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' மாவட்ட கள நிலவரம்!கன்னியாகுமரிகேரளாவைப்... மேலும் பார்க்க

Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், "ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும்" என அமெரிக்க ... மேலும் பார்க்க