செய்திகள் :

TVK: விஜய் அலையில் தலை தப்பித்த எடப்பாடி; நிம்மதி பெருமூச்சில் அதிமுக நிர்வாகிகள்!

post image

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்ட நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் அக்கட்சியின் வேட்புமனு குளறுபடி காரணமாக தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பிரேம் குமார் என்பவருக்கு த‌.வெ.க ஆதரவு வழங்கியது. வாக்குப்பதிவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட ஆதரவு என்றாலும் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார்.

இந்தத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் இலக்கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது சுயேச்சை வேட்பாளர் பெற்ற வாக்குகள்.

விசில் சின்னத்தில் நேரடியாக வேட்பாளர் நின்றிருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் நெருக்கடியாக இருந்திருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளர்
தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளர்

இது குறித்து தெரிவித்த எடப்பாடி தொகுதி அ.தி.மு‌.க நிர்வாகிகள் சிலர், "கடந்த தேர்தலில் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி தி.மு.க - வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார்.

எடப்பாடி பழனிசாமி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினைப் பார்க்கும் போது விஜய் அலையில் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலை தப்பித்தது நிம்மதி அளிக்கிறது" என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க