செய்திகள் :

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

post image

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் டெல்லிக்கு சென்றார்.

டெல்லியில் விஜய்யின் ஆதரவாளர்கள் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதற்காக, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல பிரிவுகள் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், ஒரு சிறிய அளவிலான ரசிகர்கள் குழு சிபிஐ வளாகத்திற்கு அருகில் கூடியது.

தவெக விஜய்
தவெக விஜய்

அதைத் தொடர்ந்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவின் குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல. மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய்க்கு முன்பு விசாரிக்கப்பட்ட த.வெ.க நிர்வாகிகளும் இதே பதிலைக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலங்கள் இப்போது பகுப்பாய்வு செய்யப்பட்டுகிறது. மேலும், கூட்ட நெரிசலுக்கு விஜய் தரப்பில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று முன்பு கூறியிருந்த காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களும் இதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் முதல்நாள் விசாரணை நிறைவுற்ற நிலையில், இரண்டாவது நாளாக நாளை (ஜன. 13) காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க

வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்... மேலும் பார்க்க

கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் ரௌடி வெட்டிக் கொலை; ஆளும் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி (20) இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப... மேலும் பார்க்க

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்க... மேலும் பார்க்க