செய்திகள் :

TVK: `விஜய்க்கு வாழ்த்து... ஸ்டாலினுக்கு ஆதரவு...' - நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்!

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது. அதேநேரம், கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

இந்த நிலையில், திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ், ``விஜய் அவர்களுக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று விஜய் கூறியிருந்தார். அவர்கள் வழிநின்று ஒரு சிறப்பான, சமூக நீதி ஆட்சியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

என்னுடைய அன்புச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மையிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியைக் கண்டு தோண்டு விடுபவர் அல்ல.

கடந்த ஐந்த ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சி திட்டங்கள், நலத்ததிட்டங்களைக் கொண்டுவந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்கு, என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு, அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தத் திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த ஐந்த ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும், மன உறுதியோடும், மன மகிழ்வோடும் மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்க... மேலும் பார்க்க