ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!
தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி.
நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா, உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

இன்று மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.
இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் கமர்ஷியல் படங்களை தயாரித்தவர்தான், இன்று பல தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷன்.

இவருடைய மகன்கள் ரமேஷும், ஜீவாவும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள்.
ராஜஸ்தானிலிருந்து இவருடைய உடல் நாளை சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இவருடைய மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
















