செய்திகள் :

தவெக: ``என் கனவில் பாதி பலித்துவிட்டது; மீதிக்கு உழைக்க வேண்டும்"- விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து!

post image

தமிழக அரசியலில் தடம் பதித்து, பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் தான் கூறிய ஒரு ரகசியத்தை இப்போது எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா பதிவில், ``விஜய் சார், வாரிசு படப்பிடிப்பின் போது நான் உங்களிடம் ஒன்று சொன்னேன்.

'தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை உங்கள் கையால் வாங்க வேண்டும்' என்பதுதான் என் ஆசை என்றேன். இன்று அதில் பாதி நிஜமாகிவிட்டது. இனி நான் கடுமையாக உழைத்து சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, உங்கள் கையால் அந்த விருதைப் பெறுவேன் நண்பா!. இப்போது நான் மிகவும் குஷியாக இருக்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல நட்சத்திரங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வரும் வேளையில், எஸ்.ஜே.சூர்யாவின் இந்த வாழ்த்து தனித்துத் தெரிகிறது.

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

RB Choudary: "இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்!" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட... மேலும் பார்க்க

தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழப்பு!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்க... மேலும் பார்க்க