செய்திகள் :

Vijay: "இன்றைய CM... வருங்கால PM... முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர்" - அமைச்சர் ஜெகதீஸ்வரி

post image

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், விஜய்தான் அடுத்த பிரதமர் எனக் கூறினார். இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்திருந்தார்.

 அமைச்சர் ஜெகதீஸ்வரி
அமைச்சர் ஜெகதீஸ்வரி

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆமத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, "இன்றைய CM.. வருங்கால PM.. வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும்.

இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே பயணிப்போம்" என்று ஜெகதீஸ்வரி பேசியிருப்பது மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க