செய்திகள் :

Vijay : "மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும்.!" - சுட்டிகாட்டும் திருமா

post image

காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்திற்குக் கடந்த திங்கட்கிழமை முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பதிலுரை அளித்திருந்தார்.

சட்டமன்றத்தில் அவர் பேசும்போது வெளிப்படுத்திய உடல்மொழியை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இச்செயல், கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அறிக்கையில் திருமா, "காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு.

தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்த நாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த விவாதத்தின் போது இடைமறித்துச் சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். மிசா காலத்து அரசப் பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும்.

அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும்.

மாண்புமிகு அமைச்சர் அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க

`என் பொறுப்பு' - அடித்து ஆடிய உதயநிதி; இறுதியில் மாறிய பட்டியல்! - பரந்தாமன் தேர்வான பின்னணி

இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், வேட்பாளர்களை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். 'போட்டியிட வேண்டும்' என்ற மு... மேலும் பார்க்க

இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு... ரேஸில் யார் யார்?

இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில... மேலும் பார்க்க

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர்; சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரது ஆண்டுச் சம்பளம் 2.2 மி... மேலும் பார்க்க

'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.94-95 என வலுவாகியிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக, சற்று இறக்கத்தைக் கண்டாலும், இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் ரூ.95-க்கு... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: `புறக்கணிக்கும் முடிவில் தலைமை; அப்செட் உதயநிதி' - அறிவாலய அப்டேட்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். த.வெ.க-வும் அ.தி.மு.க தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தி.மு.க இரு... மேலும் பார்க்க