``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது...
Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்
சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025' கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார்.

விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், "சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு.
எங்க அப்பா கமல் சாரோட மிகப்பெரிய ரசிகர். அப்படி ஒரு ரசிகரை பார்க்க முடியாது, வீட்டில மிகப்பெரிய சண்டை நடந்து தான் அப்பா நற்பணி மன்றம் பொறுப்பில் இருந்து வெளியில வந்தாரு, அப்பாவோட திருமணத்திற்கு கூட கமல் சாரை நேரில் அழைச்சிருந்தாரு. ஆனா அவரால வர முடியல.

அப்பாவால் தான் இந்த விருது கிடைச்சிருக்கு. எங்க அப்பா என் கூட இருக்காருங்கிற நம்பிக்கையில தான் இன்னும் ஓடிக்கிட்டே இருக்கேன்" என விகடன் மேடையில் பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
















