செய்திகள் :

Vikram: கிப்பன் குரங்கு விவகாரம்; ஆப்பிரிக்க பூனை உட்பட 11 விலங்குகளை வண்டலூருக்கு மாற்றும் வனத்துறை

post image

அரிய வகை மனித குரங்கு இனமான லார் கிப்பன் குட்டியுடன் விளையாடிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார், நடிகர் விக்ரம். வனத்துறையினரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் இருந்து லார் கிப்பன் குரங்கை தன்னுடைய சம்பந்தி சென்னைக்கு கொண்டு வந்ததாகத் தெரிவித்திருந்தார். கேசவநாதன் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், அதனை உறுதி செய்தனர். 3 கிப்பன் குரங்கு குட்டிகளில் ஒன்று இறந்தது குறித்து வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்காதது, அரிய வகை விலங்குகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கேசவநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பெருந்துறை பண்ணை

பண்ணையில் உள்ள 2 கிப்பன் குரங்குகள் மட்டுமன்றி அரியவகை ஆப்பிரிக்க பூனைகள் உள்ளிட்ட 11 விலங்குகளை மீட்டு, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ``கேசவநாதன் பண்ணையில் 2 கிப்பன் குரங்குகள், 7 ஆப்பிரிக்க அரியவகை செர்வல் பூனைகள், 2 டஃடெட் கப்புச்சின் குரங்குகள் இருப்பதைக் கண்டறிந்தோம். நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் இந்த விலங்குகளை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க