செய்திகள் :

Virat Kohli: ``ஆசிரமத்தைப் பிரபலப்படுத்த ரூ5 கோடி பெற்றேனா?" - விராட் கோலி தரப்பு விளக்கம்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு 2023-ம் ஆண்டு கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சென்றிருந்தார். அப்போது விராட் கோலி இந்த ஆசிரமத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் முதல் வருகைக்காக ரூ.5 கோடி பெற்றதாக ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர் குற்றம்சாட்டினார். இது குறித்த செய்தியகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், விராட் கோலியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``விராட் கோலி குறித்து ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு மாறானவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விராட் கோலி
விராட் கோலி

மகாராஜ் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியுமே கோலியின் ஆசிரம வருகைக்குக் காரணம். பணம் பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய கூற்றுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பரப்புவதற்கு முன்பாக, செய்திகளைச் சரிபார்த்துப் பொறுப்புடன் செய்தி வெளியிடுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜாவின் தீவிர பக்தர்கள் ஆவர். இவர்கள் விருந்தாவனத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்குப் பலமுறை நேரில் சென்று தரிசனம் செய்துள்ளனர்." எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, செப்டம்பர் மாதம் பிரேமானந்த் மகாராஜாவின் குரு கிருபா குஞ்ச் ஆசிரம வளாகத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், ஆசிரமம் தரப்பு இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறது. எனவே, இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடரும் நிலையில், விராட் கோலி தொடர்பான இந்த சர்ச்சையும் பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: `காவலில் வைத்து விசாரியுங்கள்..!'- போக்சோ வழக்கில் ஆஜர்படுத்திய போலீஸ்; கோர்ட் உத்தரவு!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவல் விசாரணையில் இருக்கும் அவர்மீது, மற்றொரு புகாரின் அடிப்படை... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை?' - அமைச்சர் ராஜ் மோகன் அளித்த பதில் இதுதான்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``இந்தியாவின் பிரதமர் மோடியும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யும் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? ஏன் செ... மேலும் பார்க்க

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தனுஷ்இது ச... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.இந்நிலையில்,... மேலும் பார்க்க

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா... மேலும் பார்க்க