செய்திகள் :

Viswanath & Sons: "எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தை உருவாக்கியவர் சூர்யா சார்!" - அருண்ராஜா காமராஜ்

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

Viswanath & Sons Audio Launch
Viswanath & Sons Audio Launch

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சுனில் ரெட்டி, "சூர்யா சாருக்கும் எனக்குமான நட்பு 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இருக்கு. 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்துக்கு அவருக்கு 90 நாள் ஷூட்டிங் நடந்தது.

நான் அவர் கூட 75 நாள் ஒண்ணா வொர்க் பண்ணியிருக்கேன். மமிதா பைஜூ செட்ல இருந்தாலே எனர்ஜிதான்" எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், "என்னோட லைஃப்ல இந்த பெரிய ஈவென்ட்டை முதல் முதல்ல கொடுத்து, பாடலாசிரியரா வாய்ப்புக் கொடுத்தது ஜி.வி. சார் தான்.

நான் டைரக்டரா இருக்குறப்போ எனக்கு பாடலாசிரியராக வாய்ப்புக் கொடுத்ததும் ஜி.வி. சார் தான். என்னை ஜி.வி. சார் முழுசா நம்புவாரு. 'ஃபையர் விடுற பாட்டுலாம் வேணாம், பட்டாம்பூச்சி மாதிரியான பாட்டு குடு'னு ஜி.வி. சொன்னாரு. அதுதான் 'பட்டாம்பூச்சி' பாடல்.

Arunraja Kamaraj - Viswanath & Sons Audio Launch
Arunraja Kamaraj - Viswanath & Sons Audio Launch

நான் சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டதுக்கு பெரிய காரணம் சூர்யா சார் நடிச்ச 'ஆய்த எழுத்து' படம்தான். எல்லா நேரமும் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்குறது சூர்யா சார்தான்.

எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே சூர்யா சார் இன்ஸ்பிரேஷன்தான். இந்தப் படம் எனக்கு முக்கியமான படம். காலேஜ் படிக்கிறப்போ சூர்யா சார் லுக்கெல்லாம் இமிடேட் பண்ணுவேன். எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியவர் அவர்தான்." என்றார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க