செய்திகள் :

What To Watch: 'என்ன விலை', 'மொத ராத்திரி', 'சண்டைக்காரி' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

post image

வீக் எண்ட் வந்தாச்சு. ஷாப்பிங், அவுட்டிங், தியேட்டர், டின்னர் என இந்நேரத்திற்குப் பிளான் செய்யத் தொடங்கியிருப்பீர்கள்.

உங்கள் பிளானிங்கில் கொஞ்சம் உதவி செய்யலாம் என்று இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டியில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

உங்கள் பிளானில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

செப்டம்பர் 17-ம் தேதி ரிலீஸ் திரைப்படங்கள்:

‘என்ன விலை’ திரைப்படம் தேசிய விருது பெற்ற திரைகதை எழுத்தாளர் சஜீவ் பழுர் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையில் மற்றும் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘கோல்டு கால்’ திரைப்படம் தம்பிதுரை இயக்கத்தில் பிரணவ் கிரிதரன் இசையில் சித்து மூலிமணி, ஸ்ரீ வைஷ்ணவி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘என்ன விலை'
‘என்ன விலை'

செப்டம்பர் 18-ம் தேதி ரிலீஸ் திரைப்படங்கள்:

‘சண்டைக்காரி’ திரைப்படம் ஆர். மாதேஷ் இயக்கத்தில் அம்ரீஷ் கணேஷ் இசையில் விமல், ஸ்ரேயா சரண், பிரபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கிய 2012 மலையாளப் படம் ‘மை பாஸ்’ என்ற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டே எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘பீப்’ திரைப்படம் எல். ஷண்முகசுந்தர் இயக்கத்தில் பிரஷாந்த் விஹாரி இசையில் பிரியதர்ஷினி ராஜ்குமார், எல். ஷண்முகசுந்தர் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘நல்ல படம்’ திரைப்படம் பிரபுராம் சி இயக்கத்தில் சகிஷ்ணா சேவியர் இசையில் தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் எஸ். பாலாஜி இயக்கத்தில் சக்தி பாலாஜி இசையில் சித்து சித், தார்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் சராஜ் சீலன் இயக்கத்தில் கே.கே. கிருஷ்ணகுமார் இசையில் குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

‘பாவை’ திரைப்படம் ராகுல் விக்னேஷ் இயக்கத்தில் செந்தூரன் இசையில் முல்லையரசி, நிரஞ்சனா நெதியார், சிலம்பரசன் பொன்னுசாமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

Paris Cafe Review |பாரிஸ் கஃபே
Paris Cafe Review |பாரிஸ் கஃபே

ஆங்கிலம் - செப்டம்பர் 18-ம் தேதி ரிலீஸ்:

‘ரெசிடெண்ட் ஈவில்’ திரைப்படம் சச் கிரீக்கர் இயக்கத்தில் ஆஸ்டின் அப்ரம்ஸ், சச் செர்ரி, காளி ரெய்ஸ், பவுல் வால்டர் ஹூசர் ஆகியோர் நடிப்பில் புதிய கதை களத்தில் ஹாரர் கலந்த திரில்லராக உருவாகியுள்ளது.

‘தி அப்ரைசிங்’ திரைப்படம் ஆண்ட்ரூ கர்பீல்ட், ஜாமி பெல், ஸ்டீபன் தீல்லானே, டாம் ஹாலண்டர், காஸ்மூ ஜார்விஸ், தாமசின் மக்கென்ஸி ஆகியோர் நடிப்பில் பவுல் கிறீன்கிராஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

‘பிராக்டிகல் மேஜிக் 2’ திரைப்படத்தில் சந்திரா புல்லக், நிக்கோல் கிட்மேன், ஜோய் கிங், மயிசி வில்லியம்ஸ், லீ பேஸ், எக்ஸ்லோ மாறிடுன ஆகியோர் நடிப்பில் சூசைன்னே பிர் இயக்கத்தில் பேன்டஸி சீக்யூலாக உருவாகியுள்ளது.

மலையாளம்

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’

ஷ்யாமின் கிரீஷ் இயக்கத்தில் முஜீப் மஜீட் இசையில் சங்கீத் பிரதாப், ஷாராபுதீன், அகிலா பார்கவன், ஆனந்த் மன்மதன், கிரண் பீதாம்பரன், கோட்டயம் நஷீர் ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

'எல் & ஓ – லா & ஆர்டர்'

ரஞ்சித் இயக்கத்தில் பிரகாஷ் வர்மா, அபிராமி, ரிதுதேவ் ஐயப்பன், ஷேர்ஷா ஷெரிப் ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

மம்மூட்டி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹேப்பி ஜர்னி
ஹேப்பி ஜர்னி

இந்தி

டாய்ரா (Daayra)

கரீனா கபூர் கான், ப்ரித்விராஜ் சுகுமாரன், பிரம்மோட் சங்கீ, பிரகடி மிஸ்ரா ஆகியோர் நடிப்பில் மேகனா குல்சார் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வைப் (Vibe)

இது குணால் கெம்மு இயக்கத்தில் குணால் கெம்மு, ஸ்ப்ரேஷ் ஸ்ரீவாஸ்தவ, ப்ரீட்டி ஜிந்தா, வன்ஷிகா திர், யாஷ்பல் சர்மா, ஷர்மிளா தாஹுர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.

தெலுங்கு

ஹேப்பி ஜர்னி (Happy Journey)

அபிராம் நாயுடு இயக்கத்தில் அன்னப்பப் பூர்ணம்மா, ஆமணி, ஜான்சி, பாயல் ராதாகிருஷ்ணன், ஜீனிஷா அலிஷெட்டி, ரூபா ஸ்ரீனிவாஸ், சுநைனா ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த வாரம் ஓ.டி.டி (OTT) ரிலீஸ்கள்...திரையரங்கிற்குப் பிந்தைய ஓ.டி.டி படங்கள் ரிலீஸ்:

மொத ராத்திரி (Tamil) - Netflix

ராம் அண்ட் லீலா (Tamil) - Prime

அங்கீகாரம் (Tamil) - Sun Nxt

இருமுடி (Telugu) - Netflix

ஹுஷார் பிட்டாலு (Hushar Pittalu) (Telugu) - Prime

துடக்கம் (Thudakkam) (Malayalam) - Hotstar

சத்யத்தில் சம்பாவிச்சது (Sathyathil Sambhavichathu) (Malayalam) - Manorama Max

இடி மழை காட்டு (Idi Mazha Kaattu) (Malayalam) - Saina Play

தாரா அண்ட் ஆகாஷ் (Tara And Akash) (Hindi) - Hotstar

பெஸ்ட் ஆப் தி பெஸ்ட் (Best Of The Best) (English) - Netflix

மொத ராத்திரி
மொத ராத்திரி

ஸ்டாப் தட் ட்ரெயின்! (Stop That Train!) (English) - Netflix

சுல்தானா (Sultana) (Turkish) - Prime

மைல் எண்டு கிக்ஸ் (Mile End Kicks) (English) - Prime

பேசிபோசூகிலர் (Basibozuklar) (Turkish) - Prime

லீ க்ரோனின்ஸ் தி மம்மி (Lee Cronin’s The Mummy) (English) - ஹாட்ஸ்டார்

தி எண்டு ஆப் ஓக் ஸ்ட்ரீட் (English) – Prime Video (ரெண்ட்)

சின்னெர்ஸ் (Sinners) (English) – Netflix

ரோய் ரோய் பினாலே (Roi Roi Binale) (Assamese) - Youtubeஇந்த வார ஓ.டி.டி ரிலீஸ் சீரிஸ்:லஸ்ட் ஸ்டோரிஸ் 3 (Lust Stories 3) (Hindi) - Netflix

வெய்ட்டிங் ஹாய் S1 (Waiting Hai S1) (Hindi) - Prime Series

நெஅஃளே S1 (Neagley S1) (English) - Prime Series

தி பிக்சர்ஸ் S1 (The Fixers S1) (Mandarin) - Netflix

தி டால் S1 (The Doll S1) (Polish) - Netflix Series

கேதேட்ரல்ஸ் (Cathedrals) (Spanish) - Prime Series

 OTT
OTT

தி ஸ்கேண்டல் (The Scandal) (Korean) - Netflix Series

நாட் எ ஸ்டரேஞ்சர் (Not A Stranger) (Turkish) - Netflix Series

எ பாராசைட்ஸ் ஹார்ட் S1 (A Parasite’s Heart S1) (Thai) - Netflix Series

மாஸ்டர் தி லிஸி பார்டன் ஸ்டோரி (Monster: The Lizzie Borden Story) (English) - Netflix Series

இஷ்டரிஷாட்ஸ்ட்டுன்யா S1 (IstriSatuSatunya S1) (Indonesian) - Netflix Series

ஸ்டரேஞ்சர் திங்ஸ் : டால்ஸ் பிரம் 85 – சீசன் 2 (Stranger Things: Tales from 85 – Season 2) (English, Tamil, Telugu, Hindi) – Netflix

``பாலிவுட் போல மலையாள சினிமாவுக்கு கார்ப்பரேட் இடைத்தரகர்கள் தேவையில்லை!" - பிரித்விராஜ்

இந்தியத் திரையுலகில் மலையாள சினிமா தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துவருகிறது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் கலைப் படங்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி, பிரமாண்ட பட்ஜெட்டுகளிலும் தரமான படங்... மேலும் பார்க்க

Ramayana: ரன்பீர், சாய் பல்லவி நடிப்பில் ரஹ்மான் இசையில் `ஜெய் ஜெய் ராம்' பாடல் எப்படி இருக்கிறது?

இந்தியத் திரையுலகின் வரலாற்றிலேயே மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் `ராமாயணம்'. `தங்கல்' படப் புகழ் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் ... மேலும் பார்க்க

வரலாற்றில் முதல்முறை: `தேசிய திரைப்பட விருது விழா' - டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்?

திரைப்படங்களுக்கான நாட்டின் மிக உயரிய விருது, `தேசிய திரைப்பட விருது'. 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரை... மேலும் பார்க்க

Bigg Boss வீட்டில் மேரி கோம்: அவரின் `knockout' குணம் குறித்து பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், சல்மான் கான் தொகுத்து வழங்கும் Bigg Boss 20 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேர... மேலும் பார்க்க

`சட்டமன்றத்துக்கே போய் பேசினாலும்... முதல் மேடை, முதல் நம்பிக்கை கொடுத்தது விகடன் தான்!' - ராஜ்மோகன்

Myna wings சேனலுக்காக `Best Couple Celebrity Channel' விருதை நடிகை மைனாவும் அவர் கணவரும் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு விருதை வழங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ``எனக்கு எப்போதும் விகடன்கிழமைதான். விய... மேலும் பார்க்க

``எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே..!" - ரஜினிகாந்த் குறித்து விகடன் விருது விழாவில் கோபிநாத்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், 'விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026' விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன். '... மேலும் பார்க்க