செய்திகள் :

Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' - எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்?

post image

மெசேஜிங் செயலிகள் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் வாட்ஸ்அப்பிற்கு நேரடிப் போட்டியாக, எலான் மஸ்கின் X நிறுவனம் 'XChat' என்ற புதிய செயலியை களமிறக்கியுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'டிராக்கிங் இல்லை, விளம்பரங்கள் இல்லை' என்ற உறுதியான வாக்குறுதியுடன் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்க ஆப் ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்து, ChatGPT போன்ற செயலிகளையே பின்னுக்குத் தள்ளி, டெக் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது XChat.

அப்படி என்ன ஸ்பெஷல் இந்த XChat-ல்?

தற்போது iOS பயனர்களுக்கு மட்டும் வெளியாகியுள்ள இந்த XChat, ஒரு முழுமையான மெசேஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்புடன் கூடிய டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஆடியோ மற்றும் வீடியோ கால்கள், பெரிய குழுக்களில் உரையாடும் வசதி (தற்போது 481 உறுப்பினர்கள் வரை, விரைவில் 1000 ஆக உயர்த்தப்படும்) மற்றும் கோப்புகளைப் பகிர்வது (File Sharing) போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களும் உள்ளன.

ஆனால், இதை மற்ற செயலிகளிலிருந்து வேறுபடுத்துவதே இதன் பிரத்யேக பிரைவசி அம்சங்கள்தான். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே மெசேஜ்கள் மறைந்துபோகும் 'Disappearing Messages', மற்றவர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் வசதி, அனுப்பிய மெசேஜ்களை அனைவருக்கும் அழிக்கும் மற்றும் திருத்தும் (Edit/Delete for Everyone) எனப் பயனர்களின் பாதுகாப்பிற்குப் பெரிய கோட்டை கட்டியுள்ளது X நிறுவனம்.

'டிராக்கிங் இல்லை' - இதுதான் முக்கியம்!

இன்றைய டிஜிட்டல் உலகில், பயனர்களின் டேட்டாவைப் பின்தொடர்வதும், அதை வைத்து விளம்பரங்களைக் காண்பிப்பதும் பெரும்பாலான நிறுவனங்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்தச் சூழலில், XChat செயலி எந்தவிதமான டிராக்கிங்கும் செய்யாது, விளம்பரங்களையும் காட்டாது என்று மஸ்க் தரப்பு உறுதியளித்துள்ளது.

பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாராலும், ஏன் X நிறுவனத்தால் கூட அதைப் படிக்க முடியாது. பல்வேறு தனியுரிமை தொடர்பான வழக்குகளை வாட்ஸ்அப் சந்தித்து வரும் இந்த நேரத்தில், XChat-ன் இந்த நகர்வு பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

மஸ்கின் 'எல்லாம் இங்கேயே' கனவு!

ட்விட்டரை X ஆக மாற்றியதில் இருந்தே, அதனை ஒரு 'Everything App' ஆக, அதாவது பேமெண்ட், ஷாப்பிங், மெசேஜிங் என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் செயலியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எலான் மஸ்கின் திட்டம். ஆனால், தற்போது தனித்தனியாக செயலிகளைக் களமிறக்குவது, அவரது வியூகம் சற்று மாறியிருப்பதைக் காட்டுகிறது.

XChat-ஐத் தொடர்ந்து, 'X Money' என்ற பெயரில் ஒரு தனி பேமெண்ட் சிஸ்டத்தையும் உருவாக்கும் பணியில் X நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் XChat வழியாகவே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி வரலாம். இது நடந்தால், அது WhatsApp Pay, PayPal போன்ற சேவைகளுக்குப் பெரும் சவாலாக அமையும்.

மொத்தத்தில், ஒரு வலுவான பிரைவசி கொள்கை மற்றும் அசத்தலான அம்சங்களுடன் XChat அறிமுகமாகியுள்ளது. ஆப் ஸ்டோரில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் போன்ற ஜாம்பவானை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பயனர்களைத் தக்கவைத்துக்கொள்வதில்தான் XChat-ன் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.

ஆன்லைன் கேம்களுக்கு மே 1-ம் தேதி முதல் செக்; வயது, பதிவு வங்கி - எல்லா பக்கமுமே 'கேட்' |Full Summary

பணம் இழப்பு, கடன், தற்கொலை என இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து பெரும் தொல்லையாகவும், பிரச்னையாகவும் இருந்தது... இருந்து வருகிறது. 'சரி... பிரச்னையாகத்தான் இருக்கிறதே... அப்போது அந்த விளையாட... மேலும் பார்க்க

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயி... மேலும் பார்க்க

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வுஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவ... மேலும் பார்க்க

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வர... மேலும் பார்க்க