`வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும்.!' அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்...
With Love: "இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.." - அபிஷன் ஜீவிந்த் பேட்டி
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார்.
இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அபிஷன் ஜீவிந்தைப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், "மதன் எனக்கு கோ-டைரக்டரா வரும்போது ப்ரொடக்ஷன் சைட்ல இருந்துதான் அவரை அனுப்பி வைத்தாங்க. 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங்கிற்காக ப்ரொடக்ஷன்ல இருந்து அனுப்பி வச்சிருக்காங்கனு கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனா 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் முடியிற சமயத்துல என்னோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல மதனும் சேர்ந்துட்டார். என் மனைவி கூட இப்போ "நீ இப்பல்லாம் என்ன விட மதன்கிட்டதான் அதிகமா போன் பேசுற"னு சொல்றாங்க.
மதன் 'With Love' படத்தோட ஸ்கிரிப்ட்டை ரெண்டு வாரத்துல எழுதி முடிச்சிட்டார். ரெண்டு வாரத்துல இந்த மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட் எப்படி எழுதினாருன்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. மதன் ரொம்ப நல்லா நடிப்பாருன்றது எனக்கு அவரோட நரேஷன்லதான் தெரிஞ்சது.
முதல்ல நான் இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு. அப்புறம் என்கூட இருந்த எல்லாரும் என்ன மோட்டிவேட் பண்ணாங்க. அப்புறம்தான் சரி, பண்ணலாம்னு முடிவு எடுத்தேன்.
கதாநாயகனா நடிக்கிறதுல 'With Love' என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.
மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார். படத்தோட ப்ரிவ்யூ பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு மதனுக்கு கால் பண்ணி சந்தோஷப்பட்டேன்.
அனஸ்வரா முதல் நாள் ஷூட்டிங்ல நடிக்கிறதுக்கு சீன்ஸ் கொடுக்கல, அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி பின்னாடி இருந்த சோபால உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க.
எனக்கு முதல்ல அனஸ்வரா கிட்ட சீன்ஸ் இப்படி மாத்தலாம் அப்படி மாத்தலாம்னு பேசறதுக்குத் தயக்கமா இருந்தது. அனஸ்வரா பண்ண ஒரு குறும்புத்தனமான வேலைல சரி, இவங்களும் நம்ம மாதிரிதான் போலன்னு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் செட் ஆகிடுச்சு.

ட்ரெய்லர்ல நாங்க எதையுமே சஸ்பென்ஸா வைக்கல, முழு கதையே ரிவீல் பண்றோம். படத்த பார்க்க வர எல்லாருமே படத்தை என்ஜாய் பண்ணணும்ங்குறதுதான் எங்க நோக்கமே.
படம் பார்த்துட்டு ரஜினி சார் என்ன சொல்லுவாருன்னு நான் ரொம்ப எக்சைட்டடா இருக்கேன். ரஜினி சாருக்கு படம் பிடிக்கும்னு நம்புறேன். இந்த ப்ராஜெக்ட் நடந்ததுக்கும் நான் ஹீரோ ஆனதுக்கும் முக்கியமான காரணமே ரஜினி சார்தான்.
இந்தப் படம் பண்றத பத்தி டவுட்டுலதான் இருந்தேன். ஆனா அவரை மீட் பண்ணப் போகும்போது அவர்தான் "நல்லா இருக்கும், பண்ணுங்க"னு என்ன மோட்டிவேட் பண்ணாரு'' என்றார்.


















