செய்திகள் :

With Love: "ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன்" - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்

post image

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார்.

இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அனஸ்வராவைப் பேட்டி கண்டோம்.

வித் லவ் படத்தில்...
வித் லவ் படத்தில்...

மலையாளம் கலந்த தமிழில் நம்மிடையே பேசியவர், "தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் 'வித் லவ்' டீம் கூட இருக்கும்போது ஹோம் மாதிரி ஃபீல் ஆகும். மதன் அண்ணா இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னபோது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன்.

மதன் அண்ணா கதையைச் சொல்லும்போது நிறைய விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமான வகையில சொன்னாரு. டைரக்டர் என்கிட்ட கதை சொல்லி அடுத்த நாளே நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இவ்ளோ சீக்கிரமா நான் ஓகே சொன்ன முதல் படம் இதுதான்.

படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு" என்றவர், "'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க.

அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது.

அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன்" என மெல்ல சிரித்தவர், "இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது.

அனஸ்வரா ராஜன்
அனஸ்வரா ராஜன்

தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல.

ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு" என்றவர், " மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர்.

ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன்" என்றார் உற்சாகத்துடன்.

டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! - அப்டேட்!

கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாக... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album

‘கில்லி’ From Feb 20‘துணிவு’ From Feb 20‘சூது கவ்வும்’ From Feb 20‘தெறி’ From Feb 27‘அமைதிப்படை’ Upcoming‘தம்பி’ Upcoming‘உயிருள்ளவரை உஷா’ Released‘மௌனம் பேசியதே’ Released‘மின்னலே’ Released‘காதலர் தின... மேலும் பார்க்க

Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா

'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மா... மேலும் பார்க்க

நீலோத்தி: "நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்!" - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க