செய்திகள் :

YouTube Monetization : புதிய செக் வைக்கும் யூடியூப் - யூட்யூபர்ஸ் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்!

post image

யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, விளம்பரங்கள் மற்றும் யூடியூப் பிரீமியம் மூலம் வருமானம் ஈட்ட புதிய படைப்பாளிகள் கடுமையான இலக்குகளை எட்ட வேண்டியிருக்கும்.

புதிய அறிவிப்பின்படி, புதிய படைப்பாளிகள் கடந்த ஓராண்டில் 8,000 மணிநேரப் விவ்ஸ் (Watch hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் ஷாட்ஸ் (Shorts) விவ்ஸ் கடந்திருக்க வேண்டும். இவை இரண்டும் தற்போதுள்ள 4,000 மணிநேரப் விவ்ஸ் மற்றும் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் என்ற அளவுகோல்களை விட இரண்டு மடங்காகும்.

YouTube
YouTube Monetization

அதேவேளையில், குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் (Subscribers) இருக்க வேண்டும் என்ற விதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த புதிய விதி பாதிப்பை ஏற்படுத்தும். ஷாட்ஸ் வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக விளம்பர வருமானம் பெற, அவர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் ஷாட்ஸ் விவ்ஸ் தக்கவைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இலக்கைக் தவறவிடும் சேனல்கள் Long-form videos மூலம் தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம். மீண்டும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஷாட்ஸ் வருமான பகிர்வு தானாகவே தொடங்கிவிடும். ஷாட்ஸ் வீடியோக்களுக்கான தகுதிகளைக் கடினமாக்கினாலும், சிறிய சேனல்கள் பணம் ஈட்ட யூடியூப் மாற்று வழிகளை உறுதி அளித்துள்ளது. யூடியூப் ஷாப்பிங் (YouTube Shopping) போனஸ்கள், பிராண்ட் கூட்டாண்மைக்கான சலுகைகள் மற்றும் புதிய டிரெண்டுகளைத் தொடங்கும் படைப்பாளிகளுக்கான சிறப்புச் சலுகைகள் போன்ற கூடுதல் வருமான வழிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

YouTube
youtube

அதே சமயம், யூடியூப் பார்ட்னர் புரோகிராமின் குறைந்தபட்சத் தகுதி நிலை (Fan-funding tier) மாற்றமின்றி அப்படியே தொடர்கிறது. 500 சந்தாதாரர்கள், 90 நாட்களில் 3 வீடியோக்கள் மற்றும் 3,000 மணிநேரப் வீவ்ஸ் அல்லது 3 மில்லியன் ஷாட்ஸ் வீவ்ஸ் வைத்திருக்கும் படைப்பாளிகள், Fan-funding மற்றும் ஷாப்பிங் டூல் மூலம் தொடர்ந்து பணம் ஈட்டலாம். ஆனால், இந்தத் தளத்தில் விளம்பர வருமானம் கிடைக்காது.

பொதுவெளியில் பதிவேற்றப்பட்ட Long-form videos விவ்ஸ் மட்டுமே 8,000 மணிநேரக் கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல ஷாட்ஸ் ஃபீடில் பெறப்பட்ட விவ்ஸ் மட்டுமே ஷாட்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிரைவேட் (Private), அன்லிஸ்டெட் (Unlisted) அல்லது நீக்கப்பட்ட வீடியோக்களின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. மேலும், யூடியூப் நிறுவனம் தனது Premium Lite சேவையை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து, படைப்பாளிகளுக்கான கூடுதல் சந்தா வருமானத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

பறக்கும் கார்: பத்தே நிமிடங்களில் 40 கி.மீ கடக்கலாம்; உத்தரகாண்ட் இளைஞரின் அசத்தல் முயற்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ரவி தம்தா உருவாக்கிய ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ (HAPIDA SKYNeX) என்ற மின்சாரப் பறக்கும் கார் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது... மேலும் பார்க்க

Victor Riparbelli: நோ சொன்ன 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்; இன்று ₹38,000 கோடி AI சாம்ராஜ்யம்!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ChatGPT அறிமுகமாகி Generative AI உலகளவில் பெரும் கவனம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 'Text மட்டும் பயன்படுத... மேலும் பார்க்க

அமெரிக்க வேலையை விட்டுத் திரும்பிய தமிழர்... இந்திய MRI-யால் உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த 'Voxelgrids' என்ற மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹீலியம் இல்லாத 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய தமிழ... மேலும் பார்க்க

`சொல்லாமலேயே வேலை செய்யும் AI'- 24/7 பிண்ணனியில் இயங்கும் Gemini Spark-ஐ அறிமுகப்படுத்திய Google

இதுவரை AI சாட்பாட்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் Gemini Spark Al அதைக் கடந்து, பயனரின் சார்பாகவே செயல்படும் 24 மணி நேர AI ஏஜென்ட் என்ற புதிய AI உதவியாளரை இந... மேலும் பார்க்க

எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்' - எலான் மஸ்க் கணிப்பு

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் 'எல்லாவற்றிற்குமான செயலி' ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக ... மேலும் பார்க்க

உங்கள் Google ஸ்டோரேஜ் பற்றி நீங்கள் அறியாத 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள்: 2026 புதிய விதிகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க