செய்திகள் :

அதிமுகவுடன் பேசும் விஜய்? தவெக ஆதரவு முடிவை தள்ளிப்போடும் காங்கிரஸ்? - நிலவரம் என்ன?

post image

சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் விஜய் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியிருந்தார். காங்கிரஸூம் தவெகவுக்கு ஆதரவு தெரிவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த முடிவை காங்கிரஸ் இப்போது கொஞ்சம் தள்ளிப்போட்டுள்ளதாக தகவல்.

விஜய்
விஜய்

தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றவுடன் ராகுல் காந்தி முதல் ஆளாக விஜய்க்கு போனில் வாழ்த்து கூறியிருந்தார். ட்விட்டரிலும் இது இளைஞர்களின் எழுச்சி இதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியிருந்தார்.

டெல்லியில் இதுசம்பந்தமாக ஆலோசனைக் கூட்டமும் நடந்திருந்தது. கூட்டத்தின் முடிவில் காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால், 'விஜய்யின் கொள்கைத் தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜரும் ஒருவர்' எனப் பேசியிருந்தார். கிரிஷ் சோடங்கர் போன்ற முக்கியஸ்தர்களும் 'திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே' என்றும் பேசியிருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

இதைத்தொடர்ந்து இன்று காலை 11மணிக்கு சத்யமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதை அறிவிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களும் சத்யமூர்த்தி பவனில் திரண்டிருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் 2 மணிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

விஜய் தரப்பிலிருந்து அதிமுகவுடன் பேசுவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தங்களின் ஆதரவு நிலைப்பாடு பற்றி இறுதி பரிசீலனை செய்து வருவதாக பவன் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க