செய்திகள் :

`அமமுக டு தவெக' அமைச்சர் பி.டி.ஆர், சுந்தர்.சி யை வீழ்த்திய ஸ்கெட்ச்! - யார் இந்த முஸ்தபா?

post image

மதுரை மத்தி தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுந்தர் .சி ஆகிய இருவரையும் தோற்கடித்து 15,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் மாதர் பதுருதீன் (எ) முஸ்தபா.

மிகப்பெரிய ஸ்டார்களாக இருந்த இருவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது தான் மதுரை ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

யார் இந்த முஸ்தபா? எப்படி இந்த வெற்றி சாத்தியம் ஆனது?

முஸ்தபாவின் பூர்விகம் மதுரை. வேலைக்காக அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்து, அங்கு மட்டன் கடை நடத்தி வந்திருக்கிறார். அரசியலில் ஈடுபட வேண்டுமென எண்ணத்தால் 2018 ஆம் வருடம் அ.ம.மு.க -வில் இணைந்து டிடிவி.தினகரனுடன் பயணிக்க தொடங்கி பின்பு கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்.

சில காரணங்களால்  2019ல் அமமுகவிலிருந்து விலகி  ’தமிழ்நாடு முஸ்லீம் லீக்’ என்ற கட்சியை தொடங்கி நிறுவனதலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். விஜய் கட்சி தொடங்கியவுடன் அவருக்கு அதரவு தெரிவித்த முஸ்தபா பின்பு தவெகவின் பேச்சாளராகி மாறி ஊடகங்களில் பேசி வந்தார்.

பி.டி.ஆர் - சுந்தர் சி
பி.டி.ஆர் - சுந்தர் சி

மதுரை பூர்விகம் என்பதால் முஸ்தபாவிற்கு சிறுபான்மையின மக்கள் அதிகம் இருக்க கூடிய மதுரை மத்தி தொகுதி ஒதுக்கபட்டது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நடத்தியதால் தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை இவரால் பெற முடிந்தது.

அதோடு  ‘நான் வெற்றி பெற்றால் என்னுடைய சொந்த செலவில் சிறுபான்மையின மக்களின் புனித தலங்களுக்கு அழைத்து செல்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்தது தொகுதி முழுவதும் பேசப்பட்டது. த.வெ.க தலைவர் விஜயின் அலை, முஸ்தபா மீது சிறுபான்மையின மக்கள் வைத்த நம்பிக்கை ஆகியவை அதிமுக, திமுக வேட்பாளர்களை வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க