செய்திகள் :

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

post image

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காண்டு தனது அதிகாரம் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனது மனைவி, தாய் மற்றும் மருமகன் ஆகியோருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,270 கோடி மதிப்பிலான பொதுப்பணி ஒப்பந்தங்களை வழங்கியதாக 'சேவ் மான் ரீஜியன் ஃபெடரேஷன்' மற்றும் 'வாலண்டரி அருணாச்சல் சேனா' ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

பெமா காண்டு
பெமா காண்டு

இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் முதல்வரின் குடும்ப நிறுவனங்களுக்குப் பணிகள் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். அதைத் தொடர்ந்து, ``இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜனவரி 1, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமா என்பது குறித்து சிபிஐ 16 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் 4 வாரங்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். எந்தவொரு ஆவணமும் அழிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு வாரத்திற்குள் ஒரு 'நோடல் அதிகாரியை' மாநிலத் தலைமைச் செயலாளர் நியமிக்க வேண்டும்." என அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை உத்தரவு முதல்வர் பேமா காண்டு தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க