செய்திகள் :

ஆட்சி மாற்றத்தால் காவல்துறையில் நிகழவிருக்கும் அதிரடி: பதவிக்காக காய்நகர்த்தும் அதிகாரிகள்!

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பவர்ஃபுல் பதவிகளைப் பெற காயை நகர்த்தி வருகின்றனர். தற்போது முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அந்த அதிகாரிகளில் பலர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். தமிழக காவல்துறையை பொறுத்தவரை இதுவரை தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு விசுவாசமான அதிகாரிகளே இருந்தனர். முதல் தடவையாக த.வெ.க -வுக்கு விசுவாசமான அதிகாரிகள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் எனக் கருதப்பட்ட சிலர், த.வெ.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மூலம் பவர்ஃபுல் பதவிகளைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோரும் விஜய்க்கு ஆதரவான நிலைபாட்டிலேயே இருந்து வருகிறார்.

தவெக தலைவர் விஜய்

அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அவரே தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக தொடர அதிக வாய்ப்புள்ளது. இதைபோல தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், உளவுத்துறை ஐ.ஜி ஆகியோரும் புதிய ஆட்சி அமைந்ததும் இடமாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் த.வெக 108 இடங்களைப் பிடித்ததும் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேலூர் டி.ஐ.ஜியாக இருந்த தர்மராஜனை சென்னைக்கு ஸ்பெஷல் டூயூட்டியாக வரும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரும் சென்னை வந்து விஜய்யின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் இடமாற்றப்பட்ட கமிஷனர் ஒருவரை (ஏடிஜிபி) உளவுத்துறைப் பணிகளை மேற்கொள்ளும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவரும் டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து உளவுத்துறை பணிகளை சீக்ரெட்டாக செய்து வருகிறார். அவருக்கு கீழ் எஸ்.பி அந்தஸ்தில் இரண்டு அதிகாரிகளும் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தவெக விஜய்
தவெக விஜய்

புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதும் இவர்களுக்கான ஆர்டர் வெளிவரும் என டி.ஜி.பி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக ஏற்கெனவே உளவுத்துறையில் பணியாற்றி வருபவர்களும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய போலீஸ் கமிஷனர் பதவிகளை குறிவைத்து சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் காயை நகர்த்தி வருகிறார்கள். இதற்காக அந்த அதிகாரிகள் விஜய்யுடன் நெருக்கத்திலிருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க