செய்திகள் :

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உறவினர் டு பவானிசாகர் TVK எம்.எல்.ஏ! - யார் இந்த தமிழ்செல்வி?

post image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதியில் த.வெ.க வேட்பாளர் தமிழ்செல்வி 4,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ பண்ணாரி மற்றும் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார். முதல் தேர்தலிலேயே இரண்டு சீனியர் வேட்பாளர்களை வீழ்த்தி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தமிழ்செல்வி tvk

யார் இந்த தமிழ்செல்வி?

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி முதுகலை பட்டம் பெற்றவர். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். தமிழ் பியூட்டி சலூன் என்கிற பெயரில் அழகு நிலையம் ஒன்றை சத்தியமங்கலத்தில் நடத்தி வருகிறார்.

தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் நெருங்கிய உறவினராவார். மக்களுக்கான நீதிப் போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரின் தந்தை அந்தியூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.

முன்னாள் எம்.எல்.ஏ மகள் என்பதால் அரசியல் ஆர்வம் காரணத்தால் த.வெ.க- வில் இணைத்துக் கொண்டு இன்று எம்.எல்.ஏ- வாக உயர்ந்திருக்கிறார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க