செய்திகள் :

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

post image

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது.

அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற்றி பெற்றார், ஓ.பி.எஸ்ஸுக்கென தனித்த செல்வாக்கு இல்லை என்கிற பேச்சுகளும் தொகுதி முழுவதும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் அதிமுக-வை எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என அவருடைய ஆதரவாளர்களால் சொல்லப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட் கொடுத்த த.வெ.க, ஓ.பி.எஸ்-ஸுக்கு கடுமையான போட்டியாளராக மாறியது. இறுதியில் போராடி கரை சேர்ந்திருக்கிறார் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் வெற்றி பெற்றது எப்படி?

ஓ.பன்னீர் செல்வம் யாருடன் சேரப் போகிறார் என முடிவெடுக்க தாமதமானதாலேயே அவருடன் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலரும் திமுக-வில் ஐயக்கியமாக, தொண்டர்களோ அதிமுக-வில் இணைந்தனர். இனி ஓ.பி.எஸ்ஸுக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்ற நிலையில்தான் திமுக-வில் இணைந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்கிஸ்ஸை தொடங்கினார் ஓ.பி.எஸ்.

அதிமுக-வில் இருந்தபோது திமுக-வில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்கள், அரசியல் செய்தவர்கள் அனைவரையும் தானாகவே நேரடியாக சந்தித்து நட்பாக்கி கொண்டார். கட்சியில் சேர்ந்ததும் முக்குலத்தோர் சமூக மக்களிடையேயும், திமுக-விற்கு ஆதரவாக வாக்களியுங்கள் என  பிரசாரங்களை செய்ய தொடங்கினார்.

திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்  தொகுதியில் உள்ள ஒரு அமைப்பு விடாமல் அனைவரையும் சந்தித்து தனக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டு கொண்டார். ‘பென் டீம்’ போடிநாயக்கனூரை அலசி ஆராய்ந்து தேர்தல் வியூகங்களை அவருக்கு வகுத்து கொடுத்தது.

மேலும் தனக்கு அதிகமாக வாக்கு வாங்கி கொடுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும், அரை பவுன் தங்கமும் கொடுப்பதாக ஆஃபர் கொடுத்தது நன்றாகவே எடுப்பட்டது. அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாததது போன்ற காரணங்களால் தி.மு.க சாதகமாக இருக்க அவர்கள் கண்டுகெள்ளமால் விட்ட த.வெ.க தான் கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ், ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்து கட்சி தொடங்கியதும், மாவட்டச் செயலாளராக பொறுப்பு வாங்கியவர். பெரும்பாலான இளைஞர்களுக்கு அறிமுகமான முகம் என்றதோடு, கட்சி தொடங்கியதிலிருந்தே தொகுதி மக்களை பார்த்து அறிமுகமாகியிருக்கிறார். இதனால் அறியப்படுகிற முகமாகவும் வலம் வந்தார். இது தேர்தலின் போது எதிரொலித்தது. ஆரம்பத்திலிருந்தே லீடிங்கில் சென்ற பன்னீர் செல்வம் அதன் பின் பின்தங்கத் தொடங்கினார்.

த.வெ.க வேட்பாளர் பிரகாஷ்

10-வது சுற்றின் போது தவெக முன்னிலை பெற்றபோது பதறிப்போனார் ஓ.பி.எஸ். அதன் பின்பு 200 ஓட்டுகள் லீடிங்கில் தவெக-வை முந்தியவர், அதே கணக்கிலேயே தொடர்ந்து வந்தார்.

கடைசி சுற்றின் போதுதான் கூடுதலாக வாக்குகளை பெற்று, இறுதியில் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஓ.பி.எஸ். இதன் மூலம் தன்னுடைய ஆறாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஓ.பி.எஸ்.  

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: மூன்றாவது முறையும் தம்பியை வென்ற அண்ணன்! - காரணம் என்ன?

ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது. திமுக சார்பில் சிட்டிங... மேலும் பார்க்க