செய்திகள் :

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

post image

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் நேரடியாக திமுக களம் இயங்கியது. மொடக்குறிச்சி ம.தி.மு.க, ஈரோடு கிழக்கு காங்கிரஸ், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என கூட்டணிக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

ஈரோடு

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறவில்லை. பவானிசாகர், கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றிருக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி உட்பட தி.மு.க வசம் இருந்த மூன்று தொகுதிகளையும் இழந்திருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போனது அக்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: மூன்றாவது முறையும் தம்பியை வென்ற அண்ணன்! - காரணம் என்ன?

ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது. திமுக சார்பில் சிட்டிங... மேலும் பார்க்க