செய்திகள் :

"இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு" - தீர்ப்பு குறித்து நடிகர் திலீப் சொன்ன விஷயம்

post image

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மொத்தம் 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் முதலில் கைது செய்யப்பட்டார்.  8வது குற்றவாளியாக திலீப்பின் மீது இதற்கு மாஸ்டர் மைண்ட் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் ஆரம்பத்தில் திலீப் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக எர்ணாகுளம் கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது.

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு... நடிகர் திலீப்பை சுற்றும் சர்ச்சைகள்... நடிகைக்கு நீதி கிடைக்குமா?

முதல் குற்றவாளியாக என்.எஸ். சுனில் என்கிற 'பல்சர் சுனி', இரண்டாவது குற்றவாளியாக மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளியாக பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளியாக வி.பி. விஜேஷ், ஐந்தாவது குற்றவாளியாக எச். சலீம் மற்றும் ஆறாவது குற்றவாளியாக பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள், நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பிலிருந்ததாக இந்த 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சட்டப்பட்டவர்கள் பட்டியலில் 7 முதல் 10 வரையுள்ளவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 8-வதாக இருந்த நடிகர் திலீப் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லாதாதால் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட உடனே நீதிமன்ற வாசலிலேயே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் திலீப், "இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு. என்னுடைய சமூக, திரையுலக அஸ்தஸ்த்தை, மரியாதையை, என் வாழ்வையே கெடுப்பதற்காக இந்த வழக்கில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால், இன்று நிதிமன்றத்தில் நான் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய நடிகர் திலீப்
நடிகர் திலீப்

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

இந்த விவகாரத்தில் எனக்காக கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். எனக்காக நீதிமன்றத்தில் போராடிய வழக்கறிஞர்களுக்கு எனது நன்றிகள். இந்த கஷ்டமான சூழ்நிலையில் என்னுடன் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ் அவர்களுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார் நடிகர் திலீப்.

`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுகமூத்த அமைச்சர் கே.என்.நேரு1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற... மேலும் பார்க்க

சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்... மேலும் பார்க்க

வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to

வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான்‌ கார்டை, ஆதார் கார்டு உடன்‌ இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும்.பான் - ஆ... மேலும் பார்க்க

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" - செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.அந்த வரிசை... மேலும் பார்க்க

``முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நேற்று இந்தியா வந்த புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ராணுவ ... மேலும் பார்க்க