செய்திகள் :

``இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" - கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

post image

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.

வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன். இந்து என்.ராம் மற்றும் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்த நக்கீரன் கோபால் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த காலத்தில் தான் செய்த இரண்டு தவறுகள் என திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார், வைகோ.

வைகோ, ஸ்டாலின்
வைகோ, ஸ்டாலின்

கடிதத்தில் மேலும்,

``93ல் திமுகவிலிருந்து வெளியேறிய போது நடந்த சம்பவங்கள் என 2009 ம் ஆண்டு முரசொலியில் கடிதம் எழுதினார் கலைஞர், அவருக்குப் பிறகு திமுக தலைவராகும் ஆசை எனக்கிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார் கலைஞர்.

இதைச் சுட்டிக்காட்டி இரண்டு தினங்களுக்கு முன் சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசினேன். அதைப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் நேற்று அதே பழைய பொய்யைத் தூசுதட்டி முரசொலியில் பரப்பியிருக்கின்றனர்.

என் மனதில் அன்றும் இன்றும் விசுவரூபம் எடுக்கும் ஒரே கேள்வி இதுதான். துரைமுருகனும் ஆற்காட்டாரும் கலைஞர் என்னை வெறுக்க வேண்டுமென என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாதையும் அவரிடம் சொன்னார்களா அல்லது கலைஞருக்கே உரிய கற்பனை வளத்தால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதையா இது என்பதுதான்.

மதிமுக அழைப்பிதழ்

திமுகவினரிடமும் பொது மக்களிடமும் என் பெயரை மேலும் கெடுக்கும் நோக்கிலேயே இப்படிச் செய்து கொண்டு வருகின்றனர் இவர்கள்.

ஆனால் இத்தகைய தாக்குதல்களை தாங்கி அனுபவப்பட்டு விட்டேன்,

என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறுகள் இரண்டு. ஒன்று 2006ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அந்தக் கூட்டணியை அமைக்க  வைத்தார்கள்.   .

இரண்டாவது தவறு 2017 ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இந்த இரு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது. ஆனால் எல்லாம் கடந்த காலமாகி விட்டது. இனி நமக்கு யாரும் எந்தக் கேடும் செய்ய முடியாது. இனி நமக்கு வெற்றிதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள். சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ... மேலும் பார்க்க

``எம்.பி-க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?" - மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருக்க... மேலும் பார்க்க

பாமக: ``தமிழ்நாட்டின் உண்மையான விடுதலை மே 4-தான்; ஊடக சுதந்திரம் இருக்கிறது" - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``சென்னையை சேர்ந்த ஒரு முக்கியத் ... மேலும் பார்க்க

``கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதல்; பாசிச வெறி" - தவெக அரசை சாடும் சீமான்!

தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் விஜயனை திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்ததாக தகவல் வெளியாகிய... மேலும் பார்க்க

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; 120- க்கும் மேற்பட்டோர் காயம்

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று (ஜுலை.16) காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த பிரமாண்ட ஆன்மிக விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்ட... மேலும் பார்க்க