செய்திகள் :

"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்.

சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒருவர்தான் காரணம். இப்போது அதற்காக அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

சேகர்பாபு
சேகர்பாபு

சேகர்பாபு என்ன பெரிய எக்ஸ்பெர்ட்டா. அவர் ஆளுமை மிக்கவரா? அவருக்கு அந்தத் துறை இந்தத் துறை என்று ஒதுக்கினார்கள். சென்னைக்கு எவ்வளவு செய்திருக்கலாம்.

இதில் சென்னைக்கு மேயர் வேறு இருக்கிறார். சென்னை மேயருக்கு அவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய 4 பெரிய மாநகராட்சிகளில் சென்னையும் ஒன்று.

நான் பல நாடுகளுக்கு போயிருக்கிறேன். லண்டனில் மேயர் பதவி என்பது பிரதமருக்கு நிகரானது. ஆனால் இந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மேயரை எதுவும் செயல்பட விடவில்லை. அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேயர் பிரியா
மேயர் பிரியா

அப்படி எடுக்காதக் காரணத்தினால் தான் சென்னை க்ளோஸ் ஆகிவிட்டது. சென்னைக்கு நிறைய செய்யலாம். எங்களிடம் நிறைய தீர்வுகள் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக த... மேலும் பார்க்க

Sonam Wangchuk: ``மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால்..." - எம்.பி ஆ.ராசா

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டி... மேலும் பார்க்க

``இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" - கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அ... மேலும் பார்க்க

``எம்.பி-க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?" - மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருக்க... மேலும் பார்க்க