"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் த...
Sonam Wangchuk: ``மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால்..." - எம்.பி ஆ.ராசா
‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சந்தித்த நிலையில், நேற்று மாலை திமுக எம்.பி ஆ.ராசாவும் அவரை சந்தித்து திமுக தரப்பின் ஆதரவை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ள விவகாரம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சலையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானமும், நீட் விலக்கு சட்ட மசோதாவும் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் உடல் எடை 9 கிலோவிற்கும் அதிகமாகக் குறைந்து, உடல்நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சோனம் வான்சுக்வுக்கு அரசியல் ரீதியான முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
சோனம் வான்சுக், தி.மு.க-விற்கும் அதன் தலைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவருடன் உண்ணாவிரதம் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் தி.மு.க தலைவர் சார்பில் ஆதரவு பகிர்ந்துகொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் போது, நீட் விவகாரம் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பிரச்னையான மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து தி.மு.க மிக வலுவாகக் குரல் எழுப்பும்.
போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், "எனது உயிர் முக்கியமல்ல; எனது இறப்பின் மூலமாவது இந்த அரசின் கண் திறந்து, மண்ணில் எழுச்சி ஏற்படும் என்றால், என் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறேன்" என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார். இவ்வளவு தீவிரமான போராட்டத்திற்குப் பிறகும் மத்திய மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால், தேச அளவில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்." என்றார்.











