செய்திகள் :

இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் 'BlueBird Block-2' எதற்காக இந்த செயற்கைக்கோள்?

post image

தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2 செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது.

அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM3 -M6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

 LVM3 -M6 ராக்கெட்
LVM3 -M6 ராக்கெட்

இஸ்ரோ

இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது தளத்தில் இன்று காலை 8.54 மணிக்கு LVM3 -M6 ராக்கெட் ஏவப்பட திட்டமிட்டிருந்தது.

ஆனால் ஒரு சில காரணங்களால் 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட ராக்கெட் 15 நிமிடம் 62 வினாடிகளில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன?

இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான்.

இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BlueBird Block-2
BlueBird Block-2

தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது.

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது.

எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G & 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்

ப்ளூ பேர்ட் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3-M6 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன.

சந்திரயான் 1, சந்திரயான் 2 போன்ற விண்கலன்கள் இதே LVM3 ராக்கெட் மூலம் தான் ஏவப்பட்டிருந்தது.

BlueBird Block-2
BlueBird Block-2

இஸ்ரோ தலைவர்

LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன்,

"இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும்.

இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.

இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

மோடி பாராட்டு

LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். "இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் BlueBird Block-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது.

உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.

இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.

இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது" என்று மோடி பாராட்டியிருக்கிறார்.

Aadhar Card: ஆன்லைன் ஆதார் கார்டில் செய்யக்கூடாத 5 தவறுகள்; முழு விவரம்

அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம்.ஆனால... மேலும் பார்க்க

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை" - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் Microsoft AI Tour என்ற நிகழ... மேலும் பார்க்க

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில... மேலும் பார்க்க

Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்த... மேலும் பார்க்க

'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 1... மேலும் பார்க்க

``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை

உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ).அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத... மேலும் பார்க்க