செய்திகள் :

ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன?

post image

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி, அதிபரால் ஒரு போரைத் தொடங்க முடியாது. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை.

ஆனால், ஈரான் போரைத் தொடங்கி வைத்தது என்னவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இதற்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸிடம் ஒப்புதல் வாங்கவில்லை.

தீர்மானம்

இதனால், ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமெரிக்க செனட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டிம் கைன் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு 47 பேர் சாதகமாகவும், 53 பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத்தான் பெரும்பாலும் வாக்களிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப், ஈரான் போரைத் தொடர்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

8 வாரங்களுக்கு...

இந்த இடத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், 'ஈரான் போர் இன்னும் 8 வாரங்கள் வரை தொடரலாம்' என்று கூறியது நினைவுக்கூரத்தக்கது.

ட்ரம்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ராண்ட் பால் ஆவார்.

ஒருவேளை, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்திருந்தால் ட்ரம்பால் காங்கிரஸின் அனுமதி இல்லாமல் போரைத் தொடர்ந்திருக்க முடியாது.

`கோயலுடன் முற்றும் மோதல்; தனி ரூட்டில் வானதி டு வாரிசுக்கு மாறும் சொத்துக்கள்?' | கழுகார் அப்டேட்ஸ்!

தனி ரூட்டில் வானதி!கோயலுடன் முற்றும் மோதல்...பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், மேடைக்கு அருகே காரில் வர முயன்ற வானதி சீனிவாசனை, 'நாம் ஒன்றும் வி.ஐ.பி கிடையாது' என மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

``ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்று (மார்ச்.5) முடித்துவிட்டு முதல்வர் கிளம்புகையில் 'ஒரு வழியா முடிஞ்சிருச்சு' என சைகையில் கூறி சிரித்துவிட்டு சென்றார். இது இணையத்தில் வைர... மேலும் பார்க்க

Kerala: "மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க" - பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார். பின்னர் செய்தி நிறுவனங்களில் ப... மேலும் பார்க்க