செய்திகள் :

NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.!" - மார்க்ரம்

post image

நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்த தென்னாப்பிரிக்கா அணி செமி பைனலில் ஏற்பட்ட இந்த தோல்வியால் தொடரிலிருந்தே வெளியேறியது. இதனால் T20 உலகக் கோப்பை மீண்டும் ஒரு எட்டாத கனியாகவே மாறியுள்ளது அந்த அணிக்கு.

தோல்விக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம், ``அவர்கள் ஆரம்ப ஓவர்களில் மிகவும் நன்றாக பந்து வீசினர். பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. சில பந்துகள் மந்தமாக நின்று வந்தது; அதனால் ரன்கள் எடுக்க மிகவும் கடினமாகியது. அந்த அழுத்தத்தில் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே அவர்களின் பந்து வீச்சு அணிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும்.

பேட்டிங்கிலும், யாராவது ஒருவர் ஃபின் அலென் போன்ற பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், ஃபீல்டிங் அணி போட்டியில் இருந்து நழுவி விடும். 170 ரன்கள் அடைந்தது நல்ல முயற்சிதான். இந்த இலக்குதான் நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வைத்திருந்தது. ஆனால் T20 கிரிக்கெட் பொறுத்தவரை, பவர் பிளே ஓவர்களை எந்த அணி சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவர். அதேபோல்தான் நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடினார்கள்.

ஃபின் அலெனின் இன்னிங்ஸுக்கும், டிம் செய்ஃபர்டின் இன்னிங்ஸுக்கும் பெரிய பாராட்டு. அவர்கள் ஆரம்பத்திலேயே போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள் தான்.

எப்படியாவது 190 வரை கொண்டு சென்றிருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம். இதைப் பற்றி குழுவாக ஆய்வு செய்வோம். முடிவால் நிச்சயமாக ஏமாற்றம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த அணியைப் பற்றி பெருமை உள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டமான இரவு மட்டுமே.

அணியாகவும், தனிநபர்களாகவும் முன்னேற முயற்சிப்போம். அது எதிர்காலத்தில் நமக்கு நல்ல பலன் தரும்.

மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால் அதனால் நாங்கள் இன்னும் வலிமையாகி, அடுத்த முறையில் சிறப்பாக திரும்புவோம்." என்றார்.

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில்... மேலும் பார்க்க

"ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்"- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த... மேலும் பார்க்க

``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!" - கோச் கம்பீர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் ... மேலும் பார்க்க

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்... மேலும் பார்க்க

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி - ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?

நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான்,... மேலும் பார்க்க