செய்திகள் :

``ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

post image

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்று (மார்ச்.5) முடித்துவிட்டு முதல்வர் கிளம்புகையில் 'ஒரு வழியா முடிஞ்சிருச்சு' என சைகையில் கூறி சிரித்துவிட்டு சென்றார். இது இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் அந்த சைகை குறித்து பேசியிருக்கிறார்.

"இந்த மண விழாவுக்கு நான் எந்த சூழலில் நான் வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நேற்றிரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டு தான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் முடித்துவிட்டு தான் வந்திருக்கிறேன்.

நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரிலே ஏறுகிறபோது கையை எடுத்து ஒரு செய்கை செய்திருப்பேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை.

ஏதோ காரில் ஏறுகிறபோது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்கள். முடிந்துவிட்டது என்று சொன்னேன் அவ்வளவு தான். அது இன்று வைரலாகி இருக்கிறது.

மகிழ்ச்சியோடு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்ய சபாவிற்கு இரண்டு வேட்பாளர்களை அனுப்ப இருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதனால் நான் இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு செல்ல வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

பீகார்: 'அரசியல் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்தே ஒரு ஆசை!' - பதவி விலகுவதாக அறிவித்த நிதிஷ் குமார்

'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என்று நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் கு... மேலும் பார்க்க

`கோயலுடன் முற்றும் மோதல்; தனி ரூட்டில் வானதி டு வாரிசுக்கு மாறும் சொத்துக்கள்?' | கழுகார் அப்டேட்ஸ்!

தனி ரூட்டில் வானதி!கோயலுடன் முற்றும் மோதல்...பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், மேடைக்கு அருகே காரில் வர முயன்ற வானதி சீனிவாசனை, 'நாம் ஒன்றும் வி.ஐ.பி கிடையாது' என மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

ஈரான் போர்: ட்ரம்ப்பிற்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்; அமெரிக்க அரசியலமைப்பு சொல்வது என்ன?

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தின் படி, அதிபரால் ஒரு போரைத் தொடங்க முடியாது. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், ஈரான் போரைத் தொடங்கி வைத்தது என்னவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். இதற்கு... மேலும் பார்க்க

Kerala: "மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க" - பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கிறாரா கணவர்?

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் சி.பி.எம். மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யுடன் தொடர்பில் இருந்தார். பின்னர் செய்தி நிறுவனங்களில் ப... மேலும் பார்க்க