செய்திகள் :

எம்.ஜி.ஆருக்கு முன் தமிழக சட்டமன்றம் சென்ற முதல் நடிகர்; யார் தெரியுமா?

post image

திரைத்துறையிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் நபர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர் அவர்கள்தான். ஆனால், இந்தியாவிலேயே நடிகராக இருந்து சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல் நபர் யார் தெரியுமா?

நாடகங்களில் நடிக்கத்தொடங்கி சினிமாவுக்குள் நுழைந்தவர் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவர்தான் எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே சட்டமன்றத்துக்குச் சென்ற நடிகர்.

எஸ்.எஸ் ராஜேந்திரன்
எஸ்.எஸ் ராஜேந்திரன்

எஸ்.எஸ். ராஜேந்திரன்

கலைஞர் கருணாநிதி எழுத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசனுக்கு அண்ணனாக நடித்த ராஜேந்திரன், 'முதலாளி '(1957) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

'ரத்தக் கண்ணீர்', 'ரங்கூன் ராதா', 'சிவகங்கைச் சீமை' போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று.

'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கனீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.

முதல் நடிகராக சட்டமன்றத்தில் நுழைந்த ராஜேந்திரன்

1962ம் ஆண்டு திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் நடிகராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார்.

1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ராஜேந்திரன்.

எஸ்.எஸ் ராஜேந்திரன்
எஸ்.எஸ் ராஜேந்திரன்

இறுதிக்காலத்தில் அரசியலில் விலகல்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சில காலம் தனிக் கட்சித் தொடங்கி செயல்பட்டவர், பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

அதன்பிறகு திருநாவுக்கரசுடன் இணைந்து செயல்பட்டவர், இறுதிக்காலத்தில் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

பிறகு திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ, ஒலிப்பதிவு தியேட்டர் போன்றவற்றை நிர்வகித்து வந்தவர் நுரையீரல் தொற்று காரணமாக 2014 ஆம் ஆண்டு மறைந்தார்.

"அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை" - ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டின் போது, ``வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்'' என்று ட்ரம்ப் ந... மேலும் பார்க்க

அழுத்தம் கொடுக்கும் வானதி சீனிவாசன்; அப்செட் அண்ணாமலை; கோவை வடக்கு தொகுதிக்கு உச்சகட்ட போட்டி

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கோவை தெற்கு தொகுதி ஒத... மேலும் பார்க்க

கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இரண்டு முக்கியக் கட்சிகளூம் தேர்தல் கூட்டணிகளை ஒரு வழியாக இறுதி செய்து விட்டன.இந்த இரு அணிகள் தவிர நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தனித்துக் களம் ... மேலும் பார்க்க

`ஒரு டீ விலை 5 ரூபாய் இருக்கும்போது 50,000 லிமிட்னு சொன்னாங்க.! இன்னைக்குமா?' - விக்கிரமராஜா

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.தேர்தலில் மக்களுக்குப் பண விநியோகம் நடப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாகக் கண்க... மேலும் பார்க்க

"தளபதிக்கு உதயநிதி; எனக்கு கதிரவன்" - மகனுக்காக களமிறங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மகனுக்கு மகுடம்.!தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தன் மகன் கதிரவனுக்கு எப்படியாவது மகுடம் சூட்டிவிட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் காய்நகர்த்தி வருகிறார். 2021 ... மேலும் பார்க்க