செய்திகள் :

`கருப்பு சிவப்புக் கொடி; தங்களது நல்வரவு - நல்லுறவு"- தேமுதிக-வை வரவேற்ற ஸ்டாலின்

post image

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது.

தேமுதிக திமுகவில் இணைந்தது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், " முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்"என்று பதிவிட்டிருக்கிறார்.

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை... பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி, த.வெ.க நிர்வாகிகள்... மேலும் பார்க்க

'ஆறில் நான்கு வேண்டும்' அடம்பிடிக்கும் பா.ஜ.க டு புறக்கணிக்கும் வேல்முருகன்! | கழுகார் அப்டேட்ஸ்

அடம்பிடிக்கும் பா.ஜ.க!'ஆறில் நான்கு வேண்டும்'கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டது. மீத... மேலும் பார்க்க

`அவருக்கு சீட் கொடுத்தால் தோற்கடிப்போம்' - ஆலங்குளம் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு எதிராக போஸ்டர்

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜி.ராஜேந்திரன். இவர், திருப்பூரில் தொழில் புரிந்து வருகிறார். இவர்,கடந்த 2001-ம் ஆண்டு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிய... மேலும் பார்க்க

'10 வருடங்கள் கழித்து திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கானக் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுகவில... மேலும் பார்க்க

திமுக பக்கம் வந்தது தேமுதிக..! - அறிவாலயத்தில் பிரேமலதா

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன்... மேலும் பார்க்க