செய்திகள் :

காஞ்சிபுரம், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்: பங்குனியிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் தலம்!

post image

முருகப்பெருமான் ஆலயங்களில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆறாம்நாள் சஷ்டி திதி அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அதேபோன்று பங்குனி மாதத்திலும் சூரசம்ஹாரம் நடைபெறும் ஒரு முருகன் கோயில் ஒன்று உண்டு. வாருங்கள் மகிமை நிறைந்த அந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இளையனார் வேலூர் என்னும் ஊர். இங்கு பாலசுப்பிரமண்ய சுவாமி கோயில் சிறப்புற அமைந்துள்ளது. இத்தலம் வேலின் மகிமையைக் கூறும் வகையில் வேலூர் என்று பெயர்பெற்றது. பிறகு சிவனாரின் இளையமகனான முருகப்பெருமானின் அருள் நிறைந்த தலம் என்பதால் இளையனார் வேலூர் என்று அழைக்கப்பட்டது.

இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்
இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்

தலபுராணம்

சூரபத்மனைப் போன்றே சிவனிடம் வரம் பெற்று பல அக்கிரமங்களைச் செய்துவந்தனர் மலையன் மற்றும் மாகறன் எனும் அசுரர்கள்.

சிவாம்சத்தால் மட்டுமே தமக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம்பெற்று அந்த வரத்தின் மகிமையால் முனிவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

காசிப முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த இந்த அசுரர்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தனர். இதனால் மனம் நொந்த முனிவர் ஈசனிடம் முறையிட்டார்.

ஈசன் முருகப்பெருமானை அழைத்து தனது வாளை அவரிடம் கொடுத்து அசுரர்களை அழிக்கும்படிக் கட்டளையிட்டார்.

அசுரரில் இளையவனான மாகறன் பெரும்படையோடு முருகப்பெருமானோடு யுத்தம் செய்ய வந்தான். பகையை அழிக்க முருகன் எதற்கு, அவன் கையில் உள்ள வேல் போதுமே... முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை சேயாற்றின் கரையில் ஊன்றி வைத்தார். அதிலிருந்து புறப்பட்ட வெப்பம் மாகறனின் படைகளை அழித்ததும். மாகறனும் அதில் மாண்டான்.

மாகறைனை அழித்த வேலின் வெம்மையைக் கண்டு அஞ்சிய தேவர்கள் ஈசனிடம் முறையிட அவர் சிவனடியார்போல் வந்து வேலினை வெம்மையைத் தணித்து மறைந்தார். அதனால் மூவுலகமும் காப்பாற்றப்பட்டது.

இதற்கிடையே மாகறன் அழிக்கப்பட்டதை அறிந்த மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயை என்பவளை தியானித்து வணங்கினான். அவள், மலையனுக்கு ஒரு மாயா மந்திரத்தை உபதேசித்துச் சென்றாள்.

இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்

அந்த மந்திரத்தின் துணையுடன் தன் படைகளைத் திரட்டி வந்து முருகப்பெருமானுடன் போர் தொடுத்தான் மலையன். இப்போது முருகப்பெருமான் ஈசன் தந்த வாளைக் கொண்டு போர் செய்ய மாயை அழிந்தது. கூடவே மலையனும் அழிந்தான்.

அசுரர்கள் இருவரை சம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமான் எழுந்தருளிய பாசறை `இரும்புலம்’ என்றும், மலையனுடன் அவர் போரிட்ட இடம் `செம்புலம்’ என்றும், மலையன் அழிந்த இடம் `மலையான்களம்’ என்ற பெயரிலும் திகழ்கின்றன.

அசுரர்கள் அழிந்ததும், ஞானாஸ்திரத்தின் மூலம் தன் படைகளை மீட்டுக்கொண்டு, கடம்ப வனத்தை அடைந்தார் கந்தன். இது நடந்தது, பங்குனி மாதம், சுக்கில பட்சம், மகம் நட்சத்திரம் கூடிய பிரதோஷ நன்னாளில்.

அசுரர்களை அழித்த முருகனின் வீரத்தைக் கொண்டாடினர். முருகனோ ஈசனை வழிபட விரும்பி தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மூலம் திருக்கடம்ப நாதருக்கு ஆகமமுறைப்படி ஆலயம் அமைத்து, அந்த ஆலயத்தைச் சூழ நல்ல நகரத்தையும் உண்டாக்கி, தமது வேலாயுதத்தால் சேயாற்றை வரவழைத்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார்.

பிரம்ம சாஸ்தா திருக்கோலம்!

சேயாற்றின் வடகரையில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது ஆலயம். இருபுறமும் யானைகள் தாங்க, ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கும்.

இங்கே முருகப்பெருமான், மேலிரு கரங்களில் ருத்திராட்ச மாலையும் கமண்டலமும் திகழ கீழிரு கரங்களில் வலக் கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடக்கரத்தால் கடி ஹஸ்தம் காட்டி அருள்புரிகிறார்.

முருகப் பெருமானின் இந்தத் திருக்கோலம், பிரம்ம சாஸ்தா திருக்கோலம். பிரணவப் பொருளை மறந்த பிரம்மனைத் தண்டித்து முருகப் பெருமான் ஏற்றருளிய திருக்கோலம்.

எனவே இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் வழிபட்டால் அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் ஒருசேரக் கிடைக்கும் என்கிறார்கள்.

பொதுவாக முருகனோடு வள்ளி, தெய்வயானை காட்சி தருவர். ஆனால் இங்கே சிறு முருகன் பாலனாக அருள்வதால் தேவியர்க்கு சந்நிதிகள் இல்லை. ஆனால், கஜவல்லி அம்மன் என்றோர் அம்மன் சந்நிதி உள்ளது. கருவறை யின் இடப்புறம் உற்சவ மூர்த்தங்களும், ஆறுமுகக் கடவுளின் மூர்த்தமும் அருளும் மண்டபமும் உள்ளது.

இளைனார் வேலூர் பாலசுப்பிரமணியர் கோயில்

பிராகாரத்தின் இடப்புறத்தில் மூலவரான பால சுப்ரமணியரின் உற்சவ மூர்த்தி சந்நிதியும், தொடர்ந்து காசி விசுவநாதர், பெருந்தண்ட உடையார் சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்த சிறு மண்டபத்தைக் காண்கிறோம். அதனுள்தான் முருகப்பெருமான் ஏவி ஊன்றிய வேலாயுதத்தின் சிலா வடிவம் அமைந்துள்ளது.

வடகிழக்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் சற்றுத் தள்ளி சுவாமிநாத சுவாமி சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் கடம்பநாதர் சிறு சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.

இந்தத் தலத்துக்கு வந்தால் முருகன் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வாழ்வில் வெற்றிகளும் குவியும் என்கிறார்கள். மேலும் முருகப்பெருமானின் அருட்பார்வை பட்டாலே எதிரிகள் ஓடி ஒளிவார்கள் என்றும் அமைதியான வாழ்க்கை ஸித்திக்கும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இங்கே சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். மிருகசீரிட நட்சத்திர நாளில் தொடங்கி, சித்திரை நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும். ஆவணி மாதம் வளர்பிறை துவிதியை திதியில் தொடங்கி சஷ்டி திதி வரை ஐந்து தினங்கள் பவித்ரோற்சவம் நடைபெறும்.

பங்குனி மாதம் சுக்ல பட்சம், மக நட்சத்திரம் கூடிய நாளில், அருள்மிகு பாலசுப்பிரமணியர் பல ஊர்களின் வழியாக பக்தர்களுக்குக் காட்சி தந்தபடி, இளையனார்வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள கடம்பர்கோயிலுக்கு எழுந்தருளி, இரவு மலையன், மாகறன் ஆகியவர்களை சம்ஹாரம் செய்து திரும்புவார்.

இவை தவிர்த்து கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இளையனார்வேலூர்தான் அந்தத் தலம். தினமும் காலை 6 முதல் 10 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

திண்டுக்கல்: 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா –பக்தர்கள் சாமி தரிசனம்

குடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக்கு விழாகுடமுழுக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்

நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுக... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் தி... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!

ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓ... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

சிவபெருமான் நடராஜ மூர்த்தியாகத் திருநடம் புரிந்த தலங்கள் பல. சிதம்பரத்தில் தவம் செய்த பதஞ்சலிக்கும் வியாக்ர பாதருக்கும் காட்சி அருளினார் ஈசன். அது பொன் சபை எனப்பட்டது. பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அதன்ப... மேலும் பார்க்க