செய்திகள் :

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

post image

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது,  தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான்.  அவர் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஆழியாறு, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, கீழ்பவானி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, வீடூர் போன்ற பல அணைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

இதில் இன்றளவும் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பயனளித்து வருகின்றது  மணிமுத்தாறு அணை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு என்ற பகுதியில் உள்ள பச்சையாறுதான் மணிமுத்தாறு அருவியின் பிறப்பிடம். இந்த ஆறு, அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து விடுகிறது.

மணிமுத்தாறு அணை

 மழைக்காலங்களில் அதிகளவு நீர் சேர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீணாக கடலில் கலந்து வந்தது.  இதனைத் தடுத்து, விவசாயிகளுக்கு உதவும் விதமாக மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை, கடந்த   1958-ம் ஆண்டு, சிங்கம்பட்டி அருகே 118 அடி ஆழத்தில், 3 கி.மீ., நீளத்துடன் கட்டப்பட்டது. 5,511 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது.

இந்த அணை கட்டப்படும் போது சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களைத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த அணை கட்டப்பட்டு   68  ஆண்டுகள் மேலாகியும் இன்று வரை அசராமல் விவசாயிகளின் பாசனத் தேவையையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. சுமார் 67,600 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.

இந்த அணையைக் கட்டி, திறந்து வைத்த காமராசருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நினைவுத்தூண் பராமரிப்பின்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. காமராசரின் 124வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் சாதனையைப் போற்றும் இந்த நினைவுத்தூணின் அவல நிலையை நினைத்தும், முட்புதர்களை அகற்ற வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். 

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொட... மேலும் பார்க்க

"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.மாநி... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு செக்: இந்தியா, சீனாவிற்கு 100% வரி? - அமெரிக்காவின் புதிய மசோதா!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கொண்டு வந்தது அமெரிக்காவின் இரு கட்சி ஆ... மேலும் பார்க்க