செய்திகள் :

கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' - 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

post image

காஞ்சிபுரத்தின் தனித் தொகுதியான ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவே, ஓடியோடி உழைத்தது இவர்தான்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக அதிமுக களத்தில் நிறுத்திய நபர் பழனி. இவருக்கு அந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதது மிகப்பெரிய மைனஸ். அதனால், பழனி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஶ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை என்று எடுத்துக்கொண்டால், மக்களுக்கு இவர் மீது 'பெரிய உடன்பாடு' இல்லை.

செல்வப்பெருந்தகையின் வெற்றிக்கு கூட்டணி 'கை'கள் பாடுபட்டாலும், எதுவும் 'கை'கூடவில்லை.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் பெரும்பான்மையாக பட்டியல் சமூக வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளை கணிசமாக தவெகவின் வேட்பாளர் தென்னரசு அறுவடை செய்துவிட்டார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை அமைத்ததில் வெற்றியைத் தழுவிய செல்வப்பெருந்தகை, தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை.

மூன்றாவது முறையாக ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகைக்கு தோல்வி கிடைக்கிறது.

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க