ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளைய...
கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள்.

இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
சங்கீதா – பாலாஜி சிறுக சிறுக சேமித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியால் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாகியுள்ளது.

வெற்றிகரமாக வீடு கட்டி தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். கடின உழைப்பால் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.
அதன்படி ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தினவிழா பேரணியை நேரில் காண்பதற்கும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் சங்கீதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மகிழ்ச்சியடைந்துள்ளார்.

“இந்த திட்டத்தால் என் வாழ்க்கையே மாறியுள்ளது. என் மகன்களின் கல்வி தான் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.











